பீர்வா
بیٖرُو பீரு | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): தூத்பத்ரியின் நுழைவாயில் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பீர்வா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°00′47″N 74°35′42″E / 34.013°N 74.595°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பட்காம் |
Tehsil Established | 1883 |
பெயர்ச்சூட்டு | பைரம் மலை
Or King Behroop |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பீர்வா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,950 km2 (1,910 sq mi) |
ஏற்றம் | 1,598 m (5,243 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,192 |
• அடர்த்தி | 1.7/km2 (4.3/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | காஷ்மீரி மொழி, உருது, இந்தி, தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2] |
• பேச்சு மொழி | காஷ்மீரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 193411 |
வாகனப் பதிவு | JK04 |
பீர்வா (Beerwah)[3]வட இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் பட்காம் மாவட்டத்தின் பீர்வா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பீர்வா பட்காம் நகரத்திற்கு வடமேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகர் நகரதிற்கு தென்மேற்கே 32 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பிர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ள பைரம் மலையில் 1,598 மீட்டர் உயரத்தில் அமைந்த பீர்வா நகரம் சுக்நாக் ஆற்றின் கரையில் உள்ளது.[4] இந்நகரைச் சுற்றிலும் உள்ள மலைபகுதிகளில் அடர்ந்த காடுகளும், இயற்கை நீர் ஊற்றுகள் அதிகம் உள்ளதால் இதற்கு பீர்வா எனப்பெயராயிற்று. இது மலைவாழிடமான தூத்பத்ரி செல்வதற்கான நுழைவாயிலாக உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகள் கொண்ட பீர்வா நகரத்தின் மக்கள் தொகை 8,192 ஆகும். அதில் ஆண்கள் 4,430 மற்றும் பெண்கள் 3,762 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 849 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 61.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இசுலாமியர் 99.67%, கிறித்தவர்கள் 0.27% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[5]