புக்கிட் கட்டில்
Bukit Katil | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
உருவாக்கம் | 1900-களில் |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | சம்சுல் இஸ்கந்தார் முகமட் அக்கின் (2013 - 2018) |
• சட்டமன்ற உறுப்பினர் | முகமட் கடி காசிம் (2013 - 2018) |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 75450 |
இடக் குறியீடு | 06 |
புக்கிட் கட்டில் (ஆங்கிலம், மலாய் மொழி: Bukit Katil) என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் புக்கிட் கட்டில். மலேசியாவின் பிரதான எதிர்க் கட்சியான பாக்காத்தான் ராக்யாட், புக்கிட் கட்டில் நாடாளுமன்றத் தொகுதியையும்,[1] சட்டமன்றத் தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.[2]
மலாக்கா மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் இருப்பதால், இங்கு நிறைய வீடமைப்புத் திட்டங்கள் உருவாகியுள்ளன. தவிர, இந்த நகர்ப்பகுதி ஆயர் குரோ தொழிற்பேட்டை பகுதிக்கு மிக அருகிலும் இருக்கிறது. அதனால், எப்போதுமே இங்கு போக்குவரத்து நெரிசலாக இருக்கும்.
இங்கு மலாக்கா கல்வித் துறையின், தொழில்நுட்ப தொழிற் கல்வி பயிற்றகம் உள்ளது. 1964-இல் உருவாக்கப்பட்ட இந்தப் பயிற்றகம் தொழில்நுட்பக் கல்வித் துறை (Jabatan Pendidikan Teknikal) என்று முன்பு அழைக்கப்பட்டது.[4]
1918-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசலும் உள்ளது.[5] அதன் பெயர் ராவுத்துல் ஜன்னா பள்ளிவாசல் (Masjid Raudhatul Jannah, Bukit Katil). இந்தப் பள்ளிவாசலின் புதியக் கட்டடத்தை மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவா, 1969 ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார்.[5]
மலாக்கா மாநில சாலைப் போக்குவரத்து துறையின் தலைமை அலுவலகம், புக்கிட் கட்டில் ஜே.பி.ஜே. வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சாலைவரி வசூலிக்கப்படுவதும், வாகனங்கள் தொடர்பான அனைத்துப் பதிவுகளும் நடைபெறுகின்றன.[6]