புக்கிட் காயூ ஈத்தாம் | |
---|---|
Bukit Kayu Hitam | |
ஆள்கூறுகள்: 6°30′N 100°25′E / 6.500°N 100.417°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | குபாங் பாசு |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06050 |
புக்கிட் காயூ ஈத்தாம் (மலாய்: Bukit Kayu Hitam; ஆங்கிலம்: Bukit Kayu Hitam); சீனம்: 黑木山); என்பது மலேசியா, கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம் ஆகும்.
இந்த நகரம் மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) அருகே அமைந்து உள்ளது. மலேசியா தாய்லாந்து நாடுகளுக்கு இடையே எல்லைக் கடக்கும் பரபரப்பான சாலை இந்த நகரில் உள்ளது.[1]
மலேசியா-தாய்லாந்து எல்லையில் பான் டானோக் கிராமம் (Ban Danok) உள்ளது. அங்கு தான் தாய்லாந்து நாட்டிற்கான சடாவோ (Sadao) சோதனைச் சாவடியும் அமைந்துள்ளது.
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை; மற்றும் மலேசியாவின் கூட்டரசு சாலை 1; ஆகியவற்றின் வடக்கு முனையில் புக்கிட் காயூ ஈத்தாம் உள்ளது.
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை, தீபகற்ப மலேசியாவின் தெற்கில் ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரில் சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் இடத்தில் முடிவுறுகிறது. அதே வேளையில் வடக்கில், தாய்லாந்தின் பாதை 4 (Thailand's Route 4) எனும் பெட்காசெம் சாலையுடன் (Phetkasem Road) இணைக்கப்படுகிறது. மேலும் அந்தச் சாலை அப்படியே பாங்காக் மாநகரம் வரை செல்கிறது.
புக்கிட் காயூ ஈத்தாம் நகரம், கோலாலம்பூர் மாநகருக்கு வடக்கே 476 கி.மீ. தொலைவிலும்; கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டார் மாநகருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள நகரமான [[சாங்லுன்]] (Changlun) நகருக்குத் தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
புக்கிட் காயூ ஈத்தாமில் உள்ள சுங்கம், குடியேற்றம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி (Customs, Immigration and Quarantine (CIQ) Complex); அதன் உண்மையான எல்லையில் இருந்து 800 மீட்டர் தெற்கே உள்ளது. தாய்லாந்து சோதனைச் சாவடியானது டானோக் நகரின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
புதிய சோதனைச் சாவடி வளாகம்; பழைய வளாகத்தின் விரிவாக்கம் ஆகும். புதிய சோதனைச் சாவடி வளாகம் ரிங்கிட்RM 425 மில்லியன் செலவில் சீரமைப்பு செய்யப்பட்டு, 1 நவம்பர் 2017-இல், பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப் பட்டது.[2][3]