புக்கிட் ஜாலில் Bukit Jalil | |
---|---|
![]() புக்கிட் ஜாலில் அரங்கம் (2023) | |
ஆள்கூறுகள்: 3°3′31″N 101°41′31″E / 3.05861°N 101.69194°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | செபுத்தே மக்களவைத் தொகுதி |
அரசு | |
• உள்ளாட்சி | கோலாலம்பூர் மாநகராட்சி |
• முதல்வர் | ஆமீன் நோர்டின் அப்துல் அஜீஸ் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 57000[1] |
தொலைபேசி | +60 3 |
புக்கிட் ஜாலில் (மலாய்; ஆங்கிலம்: Bukit Jalil; சீனம்: 武吉加里尔) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்தின் கிழக்கில் கோலாலம்பூர் விளையாட்டு நகரம் உள்ளது; மேலும், வடக்கில் சா ஆலாம் விரைவுச்சாலை; தெற்கில் பூச்சோங்-சுங்கை பீசி நெடுஞ்சாலை; ஆகிய போக்குவரத்து அணுகல்கள் உள்ளன.
1992 வரை இந்த நகரம் புக்கிட் ஜாலில் ரப்பர் தோட்டம் (Bukit Jalil Estate) என்று அழைக்கப்பட்டது. பின்னர் தேசிய விளையாட்டு வளாகம் 1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக (1998 Commonwealth Games) ஒரு புதிய நகரமாக உருவாக்கப்பட்டது.[2]
பின்னர் 1999-ஆம் ஆண்டு வெளியான என்ட்ராப்மென்ட் (Entrapment) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடமாகவும் புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதி பயன்படுத்தப்பட்டது.[3]
புக்கிட் ஜாலில் நகரத்திற்கு டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை மற்றும் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை வழியாகவும்; கிள்ளான் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுடன் இணைப்புகள் உள்ளன. இவற்றைத் தவிர சா ஆலாம் நெடுஞ்சாலை, மாஜு விரைவுச்சாலை, மெக்ஸ் நெடுஞ்சாலை மற்றும் பந்தாய் புதிய விரைவுச்சாலை (New Pantai Expressway) வழியாகவும் புக்கிட் ஜாலில் நகரத்தை அணுகலாம்.
புக்கிட் ஜாலில் நகரம், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள SP17 புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம், SP18 செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் மற்றும் SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ஆகியவற்றால் சேவை செய்யப்படுகிறது.
இந்த நகரத்தில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் / கட்டமைப்புகள்: