புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை

கூட்டரசு சாலை 217
புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை
Bukit Jalil Highway
பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை
(Puchong–Sungai Besi Highway)
வழித்தடத் தகவல்கள்
நீளம்:4.30 km (2.67 mi)
பயன்பாட்டு
காலம்:
1995 –
வரலாறு:1997
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பூச்சோங்
  டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
JKR(B) 11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை
கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை
சுங்கை பீசி விரைவுச்சாலை
கிழக்கு முடிவு:சுங்கை பீசி
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கின்ராரா
தேசிய விளையாட்டு வளாகம்
தொழில்நுட்ப பூங்கா மலேசியா
புக்கிட் ஜாலில்
புஞ்சாக் சாலில்
நெடுஞ்சாலை அமைப்பு

புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 217 (மலேசியா) (ஆங்கிலம்: Bukit Jalil Highway அல்லது Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.

கட்டணமில்லா நெடுஞ்சாலையான இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கில் சுங்கை பீசி விரைவுச்சாலையை இணைக்கிறது; மேற்கில் பூச்சோங் ஜெயா அருகே டாமன்சாரா–பூச்சோங் விரைவுச்சாலையை இணைக்கிறது.

பொது

[தொகு]

இந்த நெடுஞ்சாலை கின்ராரா மற்றும் புக்கிட் ஜாலில் நகரங்களைக் கடந்து செல்கிறது.[1]

புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தப் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது (1998 Commonwealth Games), சா ஆலாம் விரைவுச் சாலைக்கு அடுத்த நிலையில், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு வளாகத்திற்குச் செல்லும் இரண்டாவது முக்கிய நெடுஞ்சாலையாக மாறியது.

2004-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை கூட்டரசு சாலை 217 (மலேசியா) என்று மலேசிய அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. வேக வரம்பு 90 கி.மீ. வரை அனுமதிக்கப் படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

[தொகு]