புக்கிட் தம்பூன் | |
---|---|
Bukit Tambun | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°16′21″N 100°27′44″E / 5.27250°N 100.46222°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | வட செபராங் பிறை |
நாடாளுமன்றம் | பத்து காவான் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 14200 |
மலேசிய தொலைபேசி எண் | +6-04-50XXXX |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | P |
இணையதளம் | http://www.mpsp.gov.my |
புக்கிட் தம்பூன் (மலாய்: Bukit Tambun; ஆங்கிலம்: Bukit Tambun; சீனம்: 武吉淡汶) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District) உள்ள ஒரு நகரம்.
இந்த நகரத்திற்கு மேற்கில் பத்து காவான்; மற்றும் கிழக்கில் சிம்பாங் அம்பாட் நகரங்கள் எல்லைகளாக உள்ளன. பினாங்கு பாலத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கிராமப்புற நகர்ப்பகுதி ஜாவி ஆற்றின் (Sungai Jawi) கரையில் அமைந்துள்ளது.[1]
புக்கிட் தம்புன் பகுதி சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) நகர்ப் பகுதியின் ஒரு துணைப் பகுதியாகும். இது ஒரு கடலோரக் குடியேற்றப் பகுதி. பெரும்பாலும் சீன மீனவர்கள் வசிக்கும் ஒரு மீன்பிடி கிராமமாக உள்ளது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பழைய கடைவீடுகள் புதிய தோற்றத்துடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.[1]
புக்கிட் (Bukit) என்றால் மலாய் மொழியில் குன்று அல்லது மலை; தம்பூன் (Tambun) என்றால் தட்டையானது அல்லது வட்டமானது என்று பொருள்.
புக்கிட் தம்பூன் வரலாறு 1841-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அந்தக் காலக் கட்டத்தில் பத்து காவான் பகுதியில் சர்க்கரைத் தயாரிப்புத் தொழில் தீவிரமாக இருந்தது. இந்த புக்கிட் தம்பூன் நகரம் பத்து காவான் பகுதியில் இருந்ததால் இந்த நகரமும் நன்கு செழிப்புற்று விளங்கியது.
1860-ஆம் ஆண்டுகளில் சீன மற்றும் இந்திய தொழிலாளர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டனர். பெரும்பாலோர் பத்து காவான்; புக்கிட் தம்பூன் பகுதிகளில் குடியேறினர்.[2]
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம்
(North–South Expressway Northern Route) (E1) இந்த இடத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் பினாங்கு இரண்டாவது பாலம் (Penang Second Bridge) கட்டப்பட்ட பின்னர் இந்த நகரம் பிரபலம் அடையத் தொடங்கியது.
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு (Penang International Airport) செல்ல இங்குள்ள சாலைகள் இணைப்புகளை வழங்குகின்றன. அத்துடன் மலேசியாவின் கூட்டரசு பிரதான சாலை 1 (Federal Route) (1) இந்த நகரத்தின் வழியாகத்தான் செல்கிறது.