புக்கிட் திங்கி
Bukit Tinggi | |
---|---|
நகரம் | |
![]() கோல்மார் துரோபிக்கல் பெர்ஜாயா | |
ஆள்கூறுகள்: 3°21′0″N 101°49′12″E / 3.35000°N 101.82000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெந்தோங் |
ஏற்றம் | 800 m (2,500 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 0 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
புக்கிட் திங்கி (மலாய்: Bukit Tinggi; ஆங்கிலம்: Bukit Tinggi) என்பது மலேசியா, பகாங், பெந்தோங் மாவட்டத்தில் ஒரு மலைவாழ் இடமாகும். அத்துடன் இது ஒரு சிறிய நகரம். ஒரு சிறிய குடியிருப்புப் பகுதி.
இந்த இடம் பிரெஞ்சு நாட்டுப் பாணியிலான குடியிருப்புகளைக் கொண்டது. 2,500 அடி (800 மீட்டர்) உயரத்தில் இருப்பதால் குளிச்சியான தட்பவெப்ப நிலை (22° - 26° செல்சியஸ்). கோல்மார் துரோபிக்கல் (Colmar Tropicale) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.[1]
கோலாலம்பூர் மாநகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் இந்த நகரம் அமைந்துள்ளது. கெந்திங் மலையில் இருந்து வரும் பயணிகளை ஈர்க்கும் வகையில் பிரபலமான மேல்நாட்டு வகையிலான சில உணவகங்கள் இங்கு உள்ளன.[1]
கோல்மார் துரோபிக்கல் என்பது ஒரு பிரெஞ்சு பாணியிலான கிராமம். பெர்ஜாயா இல்ஸ் ரிசார்ட் (Berjaya Hills Resort) மலைவாழ் இடத்தில், 80 ஏக்கர்கள் (320,000 m2) இயற்கை வனப் பகுதியில் அமைந்துள்ளது. பிரான்சு அல்சேசு (Alsace) எனும் இடத்தில் கோல்மார் நகரம் உள்ளது. அந்த நகரத்தின் கலாசாரப் பின்னணியில் இங்கு மலேசியாவிலும் அப்படி ஒரு நகரம் அமைக்கப்பட்டது.[2]
கோல்மார் துரோபிக்கல் கிராமம், பிரெஞ்சு பாணியிலான சில செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு தனித்துவமான ஐரோப்பிய பாணியைக் கொண்டுள்ளது.
சிறிய பிரெஞ்சு கட்டிடங்கள்; பிரெஞ்சு பாணியிலான வீடுகள்; பிரெஞ்சு பாணியிலான தங்கும் விடுதிகள் உள்ளன.
இங்கு பிரெஞ்சு உணவகங்கள் (French Cuisine), ஒரு நீச்சல் குளம், சில கடைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளன. விலங்குகள் இல்லம் (Animal House), சாகசப் பூங்கா (Adventure Park), குதிரைச் சவாரி வளாகம் (Horse Riding Zone), ஜப்பானிய பூங்கா (Japanese Garden) மற்றும் தாவரவியல் பூங்கா (Botanical Garden) போன்ற பகுதிகளுக்குச் செல்ல இலவசப் பேருந்து சேவை வழங்கப் படுகிறது.[2]