புக்கிட் தெங்கா | |
---|---|
Bukit Tengah | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°20′0″N 100°25′0″E / 5.33333°N 100.41667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | வட செபராங் பிறை |
நாடாளுமன்றம் | பத்து காவான் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 14000 |
மலேசிய தொலைபேசி எண் | +6-04-50XXXX |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | P |
இணையதளம் | http://www.mpsp.gov.my |
புக்கிட் தெங்கா (மலாய்: Bukit Tengah; ஆங்கிலம்: Bukit Tengah; சீனம்: 武吉丁雅) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District) உள்ள ஒரு தொழில்துறை நகரம்.
கம்போங் புக்கிட் தெங்கா (Kampung Bukit Tengah) எனும் கிராமத்தின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம்
(North–South Expressway Northern Route) (E1) இந்த நகரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது.[1]
புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam) பெரிய நகரத்தின் 14000 எனும் அஞ்சல் குறியீட்டைப் பகிர்ந்து கொள்ளும் எல்லைக்குள் இந்த நகரம் அமைந்துள்ளது. புக்கிட் தெங்காவில் உள்ள பண்டார் பாரு (Bandar Baru) எனும் சிறுநகரம் இப்போது ஐகான் சிட்டி (Icon City) என்று அழைக்கப்படுகிறது.
புக்கிட் தெங்கா சாலை (Bukit Tengah Road), நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் முக்கிய கூட்டரசு சாலையாக அமைகிறது.
இந்தச் சாலை வடமேற்கில் செபராங் பிறை (Seberang Perai), பட்டர்வொர்த் (Butterworth), பிறை (Perai) நகரங்கள்; கிழக்கில் புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam) நகரம்; தெற்கில் ஜூரு (Juru) சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.
புக்கிட் தெங்கா சாலையில், புக்கிட் தெங்கா தொழில் பூங்கா (Bukit Tengah Industrial Park), ஸ்ரீ ரம்பாய் சிறுதொழில் பூங்கா (Sri Rambai Light Industrial Park) மற்றும் உத்தாரியா தொழில் பூங்கா (Utaria Industrial Park) ஆகிய தொழில் பூங்காக்கள் உள்ளன.
மலேசியாவில் மிகப் பிரபலமான நெடுஞ்சாலை வாகன வளாகமான ஆட்டோ சிட்டி வளாகம் (Highway Auto-City) இந்த புக்கிட் தெங்கா நகரில் தான் உள்ளது.[2]