புக்கிட் பிந்தாங் சாலை Bukit Bintang Road Jalan Bukit Bintang | |
---|---|
புக்கிட் பிந்தாங் சாலை (2021) | |
முக்கிய சந்திப்புகள் | |
கிழக்கு முடிவு: | அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (Royal Selangor Golf Club) |
கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 இம்பி சாலை ராஜா சோழன் சாலை (Broadrick Road) கோலாலம்பூர் உள்வட்ட சாலை புடு சாலை | |
தென்மேற்கு முடிவு: | புடு சாலை சந்திப்புகள் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | இம்பி சாலை கோலாலம்பூரின் தங்க முக்கோணம் புடு, கோலாலம்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
புக்கிட் பிந்தாங் சாலை (ஆங்கிலம்: Bukit Bintang Road); (மலாய்: Jalan Bukit Bintang) என்பது மலேசியா கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பிரபலமான சாலை ஆகும்.
புக்கிட் பிந்தாங் கடைவலப் பகுதி, பல முக்கியமான விற்பனை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், மதுபான விடுதிகள், இரவுச் சந்தைகள், உணவு அங்காடிகள்; மற்றும் பல்வகை மேல்நாட்டு உணவகங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகள்; மற்றும் உள்ளூர் மக்களிடையே; குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமானது.[1]
மலேசியாவில் 'கணினிப் பொருட்களின் சொர்க்கம்' எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங் வணிக வளாகத்திற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[2][3]
2021 சூன் மாதம், கோலாலம்பூர் மாநகராட்சி, புக்கிட் பிந்தாங் சந்திப்பில் சிபுயா பாணியிலான பாதசாரிக் கடவையை (Shibuya-style pedestrian crossing) உருவாக்கியது. கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாள நிலையத்திற்கு (KL Monorail Line) கீழ், இந்தப் பாதசாரிக் கடவை அமைந்து உள்ளது. இதற்கு பிந்தாங் நடைபாதை என்று பெயர்.[4][5]
கிமீ | வெளிவழி | இணைமாற்றம் | இலக்கு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
கிழக்கு அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (RSGC) |
|||||
அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (RSGC) | |||||
கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 (துன் ரசாக் சாலை) | |||||
அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (RSGC) இடைமாற்றம் | கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 துன் ரசாக் சாலை வடக்கு அம்பாங் சாலை அம்பாங் ஜெயா உலு கிள்ளான் செதாபாக் செந்தூல் தெற்கு சுங்கை பீசி செராஸ் | ||||
கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 (துன் ரசாக் சாலை) | |||||
புக்கிட் பிந்தாங் சாலை | |||||
குவைத் நாட்டுத் தூதரகம் | |||||
மருத்துவ மையம் | |||||
இம்பி சாலை | தென்மேற்கு இம்பி சாலை இம்பி புடு |
T- சந்திப்புகள் | |||
பிந்தாங் நடைபாதை பிந்தாங் சுற்றுலா நடைபாதை தொடக்கம் | |||||
விசுமா கெக் செங் | லக்சம்பர்க் தூதரகம் | ||||
JW மேரியட், கோலாலம்பூர் | |||||
இசுடார்கில் காட்சியகம் | |||||
கோலாலம்பூர் பெவிலியன் | |||||
பாரன்ஹீட் 88 (கேஎல் பிளாசா) |
|||||
காடிங் சாலை | காடிங் சாலை வால்டர் கிரேனியர் தெரு |
ஒருவழிப் பாதை | |||
கோலாலம்பூர் லாட் 10 | |||||
புக்கிட் பிந்தாங் | வடக்கு கோலாலம்பூர் உள்வட்ட சாலை சுல்தான் இசுமாயில் சாலை (திரெச்சர் சாலை) ராஜா சோழன் சாலை (வெல்டு சாலை) பி. ராம்லி சாலை அம்பாங் சாலை துங்கு அப்துல் ரகுமான் சாலை (பத்து ரோட்) |
சந்திப்புகள் | |||
புக்கிட் பிந்தாங் நிலையம் | புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் |
||||
பிந்தாங் சுற்றுலா நடைபாதை பிந்தாங் சுற்றுலா நடைபாதை முடிவு | |||||
பூலான் சாலை | தென்கிழக்கு பூலான் சாலை லோ யாட் பிளாசா |
ஒருவழிப் பாதை | |||
பெடரல் தங்கும் விடுதி | |||||
தோங் சின் சாலை | தோங் சின் சாலை | ஒருவழிப் பாதை | |||
லோரோங் புடு 14 | லோரோங் புடு 14 | ஒருவழிப் பாதை | |||
புக்கிட் பிந்தாங் சாலை | |||||
புடு சாலை | |||||
புடு சாலை | புடு சாலை வடமேற்கு துன் ரசாக் சாலை செங் லோக் சாலை புடு சென்ட்ரல் தென்கிழக்கு செராஸ் பெட்டாலிங் ஜெயா சிரம்பான் மலாக்கா ஜொகூர் பாரு |
T- சந்திப்புகள் |