புங் மொக்தார் ராடின் Bung Moktar Bin Radin بوڠ مختار رضين | |
---|---|
சபா அமைச்சர் பதவிகள் | |
2020–2023 | துணை முதலமைச்சர் |
2020–2023 | பணி அமைச்சர் |
மலேசிய மக்களவை | |
1999– | பாரிசான் நேசனல் |
சபா மாநில சட்டமன்றம் | |
2020– | பாரிசான் நேசனல் |
வேறு பதவிகள் | |
2013–2018 | தலைவர் பெல்கிரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Bung Moktar bin Radin 14 செப்டம்பர் 1958 பிலிட் கிராமம், சுகாவ், கினபாத்தாங்கான், சண்டக்கான், பிரித்தானிய வடக்கு போர்னியோ (தற்போது சபா, மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) (1980-1990) அம்னோ (UMNO) (since 1990) சபா மக்கள் கூட்டணி (GRS) (2022-2023) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (BN) (since 1990) பெரிக்காத்தான் நேசனல் (PN) (aligned: 2020-2022) முவபக்காட் நேசனல்(MN) (2019-2022) பாக்காத்தான் அரப்பான் (PH) (2022) சபா மக்கள் கூட்டணி (GRS) (2022-2023) |
துணைவர்(கள்) | நோர் அசிதா அலிமுதீன் சிசி எசெட் (தி. 2009) |
வேலை | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
புங் மொக்தார் ராடின் (ஆங்கிலம்; Bung Moktar Bin Radin; மலாய்: Datuk Seri Panglima Bung Moktar bin Radin) (பிறப்பு: 14 செப்டம்பர் 1958) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; வழக்கறிஞர் ஆவார். மலேசிய மக்களவையில் ஐந்து முறை மக்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்த இவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கான மக்களவை உறுப்பினர் எனவும் அறியப்படுகிறார்.[1]
மலேசிய மக்களவை உறுப்பினராவதற்கு முன், அவர் சண்டக்கான் சிறப்பு விவகாரத் துறை (JASA) கிளை அலுவலகத்தில் (1987-1990) நிர்வாக அதிகாரியாகவும்; மாரா (MARA), சண்டக்கான் கிளை அலுவலகத்தில் (1990-1992) அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் 1994 முதல்1999 வரை சபா நிதி அமைச்சரின் அரசியல் செயலாளராகவும் சேவை செய்தார்.
1994-ஆம் ஆண்டு சபா மாநில தேர்தலில், எதிர்க்கட்சியின் கோட்டையாக இருந்த குவாமுட் சட்டமன்றத் தொகுதியில், பாரிசான் நேசனல் வேட்பாளராக முதல் முறையாகப் போட்டியிட்ட புங் மொக்தார் ராடின் தோல்வியடைந்தார்.
பின்னர் 1969 மலேசியப் பொதுத் தேர்தலில் கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதியில் ஐக்கிய சபா கட்சி (PBS) வேட்பாளர் அலி லத்திப் தாகா என்பவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2004, 2008, 2013 மற்றும் 2018 மலேசியப் பொதுத் தேர்தல்களில் அவர் கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். 1978-இல் அவர் அரசியலில் இணைந்ததில் இருந்து, கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதிக்கு ஐந்து முறை தேர்வு பெற்றுள்ளார். பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO); மற்றும் அம்னோ (UMNO) கட்சிகளின் பிரதிநிதியாகப் போட்டியிட்டு அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
புங் மொக்தார் ராடின் (Bung Moktar Radin) | பாரிசான் நேசனல் (BN) | 16,842 | 57.38 | 12.13 ▼ | |
மசிலாவதி அப்துல் மாலிக் (Mazliwati Abdul Malek Chua) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 12,512 | 42.62 | 19.44 | |
மொத்தம் | 29,354 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 29,354 | 98.23 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 528 | 1.77 | |||
மொத்த வாக்குகள் | 29,882 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,773 | 65.56 | 1.91 ▼ | ||
Majority | 4,330 | 14.81 | 29.24 ▼ | ||
மூலம்: [3] |