புட்டராஜ் கவாய் (Puttaraj Gawai) ( மார்ச் 3, 1914 - செப்டம்பர் 17, 2010) இந்துஸ்தானி இசை பாரம்பரியத்தில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய இசைக்கலைஞர் ஆவார். இவர், கன்னடம், சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ஒரு அறிஞர், இசை ஆசிரியர் மற்றும் சமூக சேவகராக அறியப்படுகிறார். குவாலியர் கரானாவின் (பள்ளி) உறுப்பினர்,[1] வீணை, தபலா, மிருதங்கம், வயலின் போன்ற பல கருவிகளை வாசிக்கும் திறனுக்காகவும், அத்துடன் அவரது பிரபலமான பக்தி இசை ( பஜனைகள் ) வசன சாகித்தியத்திற்காகவும் பிரபலமானவர். மேலும், இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையில் பிரபலமான பாடகர் ஆவார். இவர், 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் கௌரவமான பத்ம பூஷனைப் பெற்றவர் ஆவார்.[2]
கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தின் ஹங்கல் வட்டத்திலுள்ள தேவரா ஹோசபேட்டில் ஏழை கன்னட வீர சைவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ரேவையா வெங்கடபுர்மத் மற்றும் சீதம்மா ஆவர்.[3] இவர் தனது 6வது வயதில் கண்பார்வை இழந்தார்.[4] மேலும், இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது, தன் பெற்றோரை இழந்தார். அவரது தாய்மாமன் சந்திரசேகரய்யா இவரைத் தன் பராமரிப்பில் வளர்க்கவேண்டி, அழைத்துச் சென்றார்.
இசையில், கவாயின் ஆர்வத்தைப் பார்த்து, இவரது மாமா, கானயோகி பஞ்சாக்சர கவாய் என்பவரால், நடத்தப்படும் வீரேசுவர புண்யாசரமத்திற்கு, அழைத்துச் சென்றார். பஞ்சாக்சரா கவாயின் வழிகாட்டுதலின் கீழ், இவர் இந்துஸ்தானியில் தேர்ச்சி பெற்றார். முண்டரிகி ராகவேந்திரச்சாரின் (விசேச பரம்பரையைச் சேர்ந்தவர்) வழிகாட்டுதலின் கீழ் இவர் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றார். மேலும், ஹார்மோனியம், தபலா, வயலின் மற்றும் 10 இசைக் கருவிகளை இவர் கற்றுத் தேர்ந்தார்.[5]
புட்டராஜ் கவாய் ஒரு நாடக நிறுவனத்தை அமைத்தார். இது ஊனமுற்ற அனாதைகளுக்கு இலவச உணவு, தங்குமிடம், கல்வி ஆகியவற்றை வழங்க நிதி திரட்ட உதவுவது மட்டுமல்லாமல் நாடக கலாச்சாரத்திற்கும் பங்களிப்பு செய்யும் என்கிற எண்ணத்தில் அமைக்கப்பட்டதாகும். இவ்வாறு, "ஸ்ரீகுரு குமாரேஸ்வர கிருப போஷிதா நாட்டிய நிறுவனம்" நிறுவப்பட்டது. அவர் எழுதிய மற்றும் இயக்கிய அவரது முதல் நாடகம் 'ஸ்ரீ சிவயோகி சித்தராமா' லாபத்தைக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல வெற்றிகரமான தயாரிப்புகளும் வந்தன.[6]
புட்டராஜ் கவாய் ஆன்மீகம், மதம், வரலாறு மற்றும் 12 ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தின் பல 'சரணாக்களின்' சுயசரிதைகள் பற்றி 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கன்னடம், இந்தி மற்றும் சமசுகிருத மொழிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் பிரெயில் எழுத்து முறையில் பகவத் கீதையை மீண்டும் எழுதினார்.
கவாய் பல மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார், இது தற்போது 1000 க்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு செல்கிறது.[7] அவரது நன்கு அறியப்பட்ட சில மாணவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அவர் செப்டம்பர் 17, 2010 அன்று கர்நாடகாவின் கடக், வீரேசுவரா புண்யாசிரமத்தில் காலமானார். மரியாதைக்குரிய அரசாங்க கௌரவங்களுடன் வீரசைவ மரபுகளின்படி அவர் ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்பட்டார். செப்டம்பர் 18, 2010 அன்று கடக்கில் நடந்த அவரது இறுதி சடங்கில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக மாநில அரசு சனிக்கிழமையன்று மாநில துக்கத்தையும், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையையும் இந்த பன்முக ஆளுமைக்கு மதிப்பளிக்கும் அடையாளமாக அறிவித்தது.[14]
பி.டி. கவாய் இசை, இலக்கியம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளை வழங்கியுள்ளார். சில முக்கியமான விருதுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.