புதிய தலைமுறை (தொலைக்காட்சி) | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | 24 ஆகத்து 2011 |
வலையமைப்பு | நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிமிட்டட் |
கொள்கைக்குரல் | 'உண்மை உடனுக்குடன்' |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | புதுயுகம் தொலைக்காட்சி |
வலைத்தளம் | www.puthiyathalaimurai.com |
புதிய தலைமுறை என்பது தமிழ் மொழியில் இயங்கும் எஸ்ஆர்எம் குழுமத்திற்குச் சொந்தமான 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். ஆகத்து 24, 2011 அன்று சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் வெளியிடுகிறது.
இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது.