புதிய மன்னர்கள் | |
---|---|
![]() பாடல் அட்டைப்படம் | |
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஜே. கிறிஸ்டி ஆர். சுரேஷ் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | விக்ரம் மோகினி |
ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
படத்தொகுப்பு | எம். கணேசன் |
வெளியீடு | 2 டிசம்பர் 1994 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதிய மன்னர்கள் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விக்ரம், மோகினி, நளினிகாந்த், ஸ்ரீமன், டெல்லி கணேஷ், விவேக், எஸ்.எஸ். சந்திரன் உட்பட பல நடிகர்கள் கொண்ட இத்திரைப்படத்தை விக்ரமன் இயக்கினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான் ஆனாலும் வணிக ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை.[1]
எந்த நோக்கமுமின்றி சுற்றிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்று, அவர்கள் வாழும் ஊரின் நிலையை காப்பாற்றவும், அவர்களை சுற்றியுள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அரசியலில் நுழையவேண்டிய சூழலுக்கு உட்படுகிறார்கள். அவர்கள் எதிர்வரும் சவால்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது இத்திரைப்படத்தின் கதை.
புதிய மன்னர்கள் திரைப்படம் தயாராகிக்கொண்டிருக்கும் போது, இயக்குநர் மணிரத்னம் தனது பாம்பே திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமை அணுகுகிறார். இருந்தபோதிலும், விக்ரம் அந்த சமயத்தில் புதிய மன்னர்கள் திரைப்படத்திற்காக நீண்ட கூந்தலையும், தாடியையும் வைத்திருந்ததால், பாம்பே படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போகிறது[2].