தில்லி - சென்னை வழித்தடம் | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
நிலை | இயக்கத்தில் | ||
உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
வட்டாரம் | தில்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு | ||
முனையங்கள் | |||
சேவை | |||
செய்குநர்(கள்) | வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்னக இரயில்வே | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 1929 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 2,182 km (1,356 mi) | ||
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
இயக்க வேகம் | 160 km/hr வரை | ||
|
தில்லி- சென்னை வழித்தடம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை சமவெளிகளின் தெற்குபகுதி , கிழக்குத் தொடர்ச்சி மலைகள் , தக்காண பீடபூமி மற்றும் யமுனா பள்ளத்தாக்குகள் வழியே தில்லியையும், சென்னையையும் இணைக்கும் ஒரு தொடருந்து பாதை ஆகும்
2,182 கிலோமீட்டர்கள் (1,356 mi) நீளம் கொண்ட இந்த வழித்தடம், தில்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம், இராச்சசுத்தான், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் கிராண்ட் ட்ரங்க் விரைவுவண்டி இயங்குவதால், கிராண்ட் ட்ரங்க் வழித்தடம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
கிராண்ட் ட்ரங்க் வழித்தடமானது பிரிவு அ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே இதன் வழியே செல்லும் தொடருந்து 160கி.மீ வரை வேகமாக செல்லமுடியும்.[1]
விசயவாடா சென்னை வழித்தடம் 1989ல் மின்சாரமயமாக்கப்படது.[6]
விசயவாடா - காசிபேத் பிரிவு 1985-88ல் மின்சாரமயமாக்கப்பட்டது.[7]
காசிபேத்-இராமகுண்டம்-பாலர்சா- நாக்பூர் பிரிவு 1987-89ல் மின்சாரமயமாக்கப்பட்டது.
1988-89ல் போபால் - இட்டார்சி பிரிவும், நாக்பூர் - இட்டார்சி பிரிவு 1990-91லும் மின்சாரமயமாக்கப்பட்டது.
1984-89ல் ஆக்ரா போபால் பிரிவு மின்சாரமயமாக்கப்பட்டது.
1982-85ல் ஆக்ரா - பரிதாபாத் பிரிவு மின்சாரமயமாக்கப்பட்டது.[7]
இந்திய இரயில்வேயின் முன்பதிவு தரவுவரிசையின் முதல் 100 இடத்திற்குலுள்ள புதுதில்லி, மதுரா சந்திப்பு, ஆக்ரா கன்டோட், குவாலியர், ஜான்சி, போபால், போபால் கபீப்கஞ்ச், நாக்பூர், வாரங்கல், விசயவாடா, நெல்லூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய தொடருந்து நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது.[8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)