புத்ததத்தர் என்பவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்[1] உறையூரில் வாழ்ந்த ஒரு தமிழறிஞர். இவர் பௌத்த சமயத்தைச் சேர்நதவர். களப்பிரர் குல மன்னர் அச்சுத விக்கிராந்தன்[2] காலத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் பாளி மொழியில் எழதிய அபிதம்மாவதாரம்[3] புத்தவம் சாட்டகதா, வினயவினிச்சயம், உத்தரவினிச்சயம், ரூபாரூபவிபாகம், ஜினாலங்காரம்[4] போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். இது மட்டுமின்றி பாலி மொழி நூல்களுக்கு இவர் பாலி மொழியிலேயே உரைகளும் எழுதி உள்ளார். சோழநாட்டு உறையூரில் பிறந்த இவர் காவிரிபூம்பட்டினம், பூதமங்கலம், காஞ்சிபுரம், ஸ்ரீலங்காவில் அநுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள புத்த விகாரங்களில் இருந்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் தமிழகம் பற்றி அறிய உதவும் சான்றுகளில் புத்ததத்தர் நூல்களும் உறுதுணையாக உள்ளன.[5]
{{cite book}}
: Missing or empty |title=
(help); Unknown parameter |authormask=
ignored (help); Unknown parameter |மொழி-=
ignored (help)CS1 maint: unrecognized language (link)