புத்தாத்தான் (P173) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Putatan (P173) Federal Constituency in Sabah | |
புத்தாத்தான் மக்களவைத் தொகுதி (P173 Putatan) | |
மாவட்டம் | கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 63,173 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | புத்தாத்தான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | புத்தாத்தான் |
பரப்பளவு | 58 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சால்மி யகயா (Shahelmey Yahya) |
மக்கள் தொகை | 115,203 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
புத்தாத்தான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Putatan; ஆங்கிலம்: Putatan Federal Constituency; சீனம்: 必打丹国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P173) ஆகும்.[5]
புத்தாத்தான் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து புத்தாத்தான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
புத்தாத்தான் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் புத்தாத்தான் நகரம். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் புத்தாத்தான் மாவட்டமும் ஒன்றாகும்.
புத்தாத்தான் நகரம், கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியின் (Greater Kota Kinabalu) துணைக்கோள் நகரங்களில் ஒன்றாகும். புத்தாத்தான் நகருக்கு அருகாமையில் பெத்தகாஸ் (Petagas) எனும் மற்றும் ஒரு துணைக்கோள் நகரமும் உள்ளது.[7]
புத்தாத்தான் நகரத்திற்குக் கிழக்கில் பெனாம்பாங் மாவட்டம்; தெற்கில் பாப்பார் மாவட்டம்; வடக்கில் கோத்தா கினபாலு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு நடுவில் புத்தாத்தான் நகரம் அமைந்துள்ளது. மேற்கில் தென் சீனக் கடல் உள்ளது.
புத்தாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
புத்தாத்தான் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P173 | 2004-2008 | மார்க்கசு மொஜிகோ (Marcus Mojigoh) |
பாரிசான் நேசனல் (உப்கோ) |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018-2022 | அவாங் உசைனி சகாரி (Awang Husaini Sahari) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சால்மி யகயா (Shahelmey Yahya) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சால்மி யகயா (Shahelmey Yahya) | பாரிசான் நேசனல் (BN) | 16,234 | 39.36 | 1.14 | |
அவாங் உசைனி சகாரி (Awang Husaini Sahari) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 16,110 | 39.06 | 6.75 ▼ | |
அகமட் முகம்ட் சாயிட் (Ahmad Mohd Said) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 8,511 | 20.63 | 20.63 | |
போயின் தூடுசு (Poyne Tudus @ Patrick Payne) | தாயக இயக்கம் (GTA) | 394 | 0.96 | 0.96 | |
மொத்தம் | 41,249 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 41,249 | 97.70 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 972 | 2.30 | |||
மொத்த வாக்குகள் | 42,221 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 63,173 | 65.30 | 11.83 ▼ | ||
Majority | 124 | 0.3 | 7.30 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)