புத்தூர் | |
---|---|
புத்தூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°49′01″N 78°40′29″E / 10.8170°N 78.6746°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 96.15 m (315.45 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 620017[1] |
தொலைபேசி குறியீடு | +91431xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | திருச்சிராப்பள்ளி, தில்லை நகர், உறையூர், கருமண்டபம், பொன்னகர், பிராட்டியூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், தென்னூர் |
மாநகராட்சி | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
சட்டமன்றத் தொகுதி | திருச்சிராப்பள்ளி மேற்கு |
புத்தூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வணிகம் சார்ந்த மக்கள் வசிப்பிடப் பகுதியாகும்.[2][3]
புத்தூர் பகுதியானது, திருச்சிராப்பள்ளியில், (10°49′01″N 78°40′29″E / 10.8170°N 78.6746°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
பிஷப் ஹீபர் கல்லூரி என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று புத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது.[4]
அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை என்ற பல்நோக்கு அரசு மருத்துவமனை ஒன்று புத்தூரில் கட்டப்பட்டுள்ளது.
குழுமாயி அம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று புத்தூரில் கட்டப்பட்டுள்ளது.[5] ஆண்டுதோறும் (ஆட்டுக்) குட்டி குடி திருவிழா என்ற 'மருளாளி என்பவர் ஆட்டுக்குட்டியை கடித்து இரத்தம் குடிக்கும்' திருவிழா புத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.[6]