புத்ரா அயிட்ஸ் Putra Heights | |
---|---|
நகரம் | |
புக்கிட் செர்மின் குன்றின் மேல் புத்ரா அயிட்ஸ் அடையாளம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°3′52″N 101°35′37″E / 3.06444°N 101.59361°E | |
நாடு | ![]() |
மாநிலம் [1] | ![]() |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | சுபாங் ஜெயா மாநகராட்சி (Subang Jaya City Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் | 47650 |
தொலைபேசி | +603-51, +603-5614 |
போக்குவரத்து | B |
புத்ரா அயிட்ஸ், (மலாய்; ஆங்கிலம்: Putra Heights; சீனம்: 布特拉高原); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், 1999-ஆம் ஆண்டில் சைம் யுஇபி பிராபர்ட்டீஸ் (Sime UEP Properties) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 1,796 ஏக்கர் குடியிருப்பு நகரமாகும்.[2]
புத்ரா அயிட்ஸில் உள்ள உயரமான புக்கிட் செர்மின் குன்றின் உச்சியில் இருந்து இந்த நகரத்தை நன்றாகப் பார்க்கலாம்.
1974-க்கு முன்பு, சுபாங் ஜெயா, கிள்ளான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுபாங் ஜெயாவின் வளர்ச்சி பிப்ரவரி 21, 1976 அன்று தொடங்கியது. அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்றது.
உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்பு ஆகியவை; இந்தப் பகுதிக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு, வளர்ச்சியின் காரணிகளாக உள்ளன. 2016-ஆம் ஆண்டில், கிளானா ஜெயா வழித்தட நீட்டிப்புத் திட்டத்தின் விளைவாக, அந்த வழித்தடம் புத்ரா அயிட்ஸ் வரை 17 கிமீ நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நீட்டிப்புத் திட்டம் புத்ரா அயிடா நகரத்திற்கு புத்துயிர் வழங்கியது. தற்போது கிளானா ஜெயா வழித்தடம் இந்த நகரத்தில் முடிகிறது.
புத்ரா அயிட்ஸ் நகரத்தைப் பல முக்கிய சாலைகள், விரைவுச்சாலைகள், மற்றும் தொடருந்துச் சேவைகள் இணைக்கின்றன.
புத்ரா அயிட்ஸ் நகரத்தின் வழியாக நேரடியாகச் செல்லும் விரைவுச்சாலை; மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு (ELITE) ஆகும். புத்ரா அயிட்ஸின் முக்கிய சாலையான வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் மத்திய இணைப்பில் உள்ள இடைமாற்றம் 19 பிப்ரவரி 2009 அன்று போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வழியாக இந்த நகரத்தை இணைக்கும் பிற முக்கிய விரைவுச்சாலைகள்:
2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, தற்போது இந்த நகரம் இலகு தொடருந்து (LRT) சேவைகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. SP31 KJ37 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம், ரேபிட் கேஎல் 5 கிளானா ஜெயா; மற்றும் 4 செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்களின் மூலமாக இணைக்கப்படுகிறது.
புத்ரா பாயிண்ட் வணிக மையம் (Putra Point Commercial Centre); மற்றும் ஜெயண்ட் ஹைப்பர் மார்க்கெட் (Giant hypermarket) ஆகியவை பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
இந்த நிலையம் 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 4 செரி பெட்டாலிங்; 5 கிளானா ஜெயா ஆகிய வழித்தடங்களின் நீட்டிப்பு திட்டத்தின் (LRT Extension Project) ஒரு பகுதியாகும். இது பூச்சோங்கில் உள்ள மற்ற 3 நிலையங்களுடன் சேர்த்து 2016 மார்ச் 31 அன்று திறக்கப்பட்டது.[3]
இந்த நிலையம் தற்போது அந்த இரண்டு வழித்தடக்கும் தெற்கு முனையமாக உள்ளது.
புத்ரா அயிட்ஸ் மக்கள் தொகை மூன்று முக்கிய இனங்களைக் கொண்டது.[4]
புத்ரா அயிட்ஸ்; மற்ற பூச்சோங் வட்டார இடங்களைப் போல சுபாங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த மாநகராட்சியில் 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள். பூச்சோங் நகர மையம் (Pusat Bandar Puchong) பெரும்பாலும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் அமைந்து உள்ளது.