புத்ராஜெயா (P125) மலேசிய மக்களவைத் தொகுதி புத்ராஜெயா | |
---|---|
Putrajaya (P125) Federal Constituency in Putrajaya | |
புத்ராஜெயா மக்களவைத் தொகுதி (P125 Putrajaya) | |
மாவட்டம் | புத்ராஜெயா |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 42,881 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | புத்ராஜெயா |
முக்கிய நகரங்கள் | புத்ராஜெயா, சைபர்ஜெயா, பெர்தானா புத்ரா, புத்ராஜெயா நகராட்சி |
பரப்பளவு | 49 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | ரட்சி சிடின் (Radzi Jidin) |
மக்கள் தொகை | 109,202[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
புத்ராஜெயா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Putrajaya; ஆங்கிலம்: Putrajaya Federal Constituency; சீனம்: 布城国会议席) என்பது மலேசியா, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P125) ஆகும்.[5]
புத்ராஜெயா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து புத்ராஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
புத்ராஜெயா, திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரு நவீன நகரமாகும். 1999-ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் நிருவாகத் தலைநகரமாகச் செயல்படுகிறது.[7] அதிகாரப்பூர்வமாக புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசம் (Federal Territory of Putrajaya) என்று அழைக்கப்படுகிறது.
1975-ஆம் ஆண்டு வரை புத்ராஜெயா புறநகர்ப் பகுதி உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. பின்னர் காஜாங் மாவட்டத்தின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது. 2001 பிப்ரவரி 1-ஆம் தேதி புத்ராஜெயா மலேசியாவின் மூன்றாவது கூட்டரசுப் பிரதேசமாக மாறியது. இதற்கு முன்னர், 1974-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் முதல் கூட்டரசுப் பிரதேசமாகவும்; அடுத்து 1984-ஆம் ஆண்டில் லபுவான் இரண்டாவது கூட்டரசுப் பிரதேசமாகவும் மாறின.
கோலாலம்பூர் மாநகருக்கு தெற்கே அமைந்துள்ள இந்தப் புத்ராஜெயா நிருவாக நகரம், மலேசிய அரசாங்கத்தின் அலுவல் மையமாகத் திகழ்கிறது. 2005-ஆம் ஆண்டு முதல் மலேசிய நடுவண் அரசின் அனைத்து அமைச்சுகளும் கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து புத்ராஜெயாவிற்கு மாற்றம் செய்யப் பட்டன.
புத்ராஜெயா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் புத்ராஜெயா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P125 | 2004–2008 | தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் (Tengku Adnan Tengku Mansor) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ரட்சி சிடின் (Radzi Jidin) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரட்சி சிடின் (Radzi Jidin) | பெரிக்காத்தான் நேசனல் | 16,002 | 43.67 | 43.67 | |
தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் (Tengku Adnan Tengku Mansor) | பாரிசான் நேசனல் | 13,692 | 37.37 | 12.10 ▼ | |
நூரயிசா மைதீன் அப்துல் அசீஸ் (Noraishah Mydin Abd Aziz) | பாக்காத்தான் அரப்பான் | 5,988 | 16.34 | 9.20 ▼ | |
ரோசுலி ரம்லி (Rosli Ramli) | தாயக இயக்கம் | 878 | 2.40 | 2.40 | |
சம்சுதீன் முகமது பவுசி (Samsudin Mohamad Fauzi) | சுயேச்சை | 63 | 0.17 | 0.17 | |
லிம் மைஸ் பி (Lim Fice Bee) | சுயேச்சை | 20 | 0.05 | 0.05 | |
மொத்தம் | 36,643 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 36,643 | 99.12 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 326 | 0.88 | |||
மொத்த வாக்குகள் | 36,969 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 42,881 | 86.21 | 5.39 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)