மலேசிய கூட்டரசு சாலை 30 Malaysia Federal Route 30 Laluan Persekutuan Malaysia 30 | |
---|---|
புத்ராஜெயா வட்டச் சாலை Putrajaya Ring Road Lingkaran Putrajaya | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 3.2 km (2.0 mi) |
பயன்பாட்டு காலம்: | 1997 – |
வரலாறு: | கட்டுமானம் 2003 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | புத்ராஜெயா பெர்சியாரான் தீமோர் மாற்றுச் சாலை |
தென்மேற்கு முடிவு: | லெபோ வாடி எசான் மாற்றுச் சாலை |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | தாமான் பிங்கிரான் புத்ரா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
புத்ராஜெயா வட்டச் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 30 (ஆங்கிலம்: Malaysia Federal Route 30; அல்லது Putrajaya Ring Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 30 அல்லது Lingkaran Putrajaya) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.
இந்த நெடுஞ்சாலை மேற்கில் பெர்சியாரான் செலாத்தான் மாற்றுச் சாலையையும் (Persiaran Selatan Interchange); வடக்கில் பெர்சியாரான் திமோர் மாற்றுச் சாலையையும் (Persiaran Timur Interchange) இணைக்கிறது.[1]
புத்ராஜெயா வட்டச் சாலை 3.2 கிமீ (2.0 மைல்) நீளம் கொண்டது; மற்றும் இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]