புன்னப்பரா
Punnappira | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°26′0″N 76°20′0″E / 9.43333°N 76.33333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 688004 |
வாகனப் பதிவு | KL-04 |
அருகில் உள்ள நகரம் | ஆலப்பழா |
புன்னாப்பரா (Punnapra) என்பது இந்தியாவின், கேரளத்தின், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது அரபிக் கடலின் கரையோரப் பகுதியில், குட்டநாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது , இது கேரளத்தின் நெற்களஞ்சியம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
புன்னப்பரா இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
இந்தியாவின் விடுதலைக்கு முன்னர் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக புன்னப்பரா இருந்தது. 1940 களில், தென்னை நார் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி நல்ல செல்வாக்கை வளர்த்ததுக் கொண்டிருந்தது. மேலும் இக்கட்சியானது தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தது. இதனால் திருவிதாங்கூர் திவான் (பிரதமர்) சே. ப. இராமசுவாமி தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்க இதில் தலையிட்டார். ஆனால் சர் சே. ப. ராமசாமி ஐயரின் ஆட்சிக்கு எதிரான ஒரு அரசியல் நடவடிக்கையான மாற்று அரசாங்கத்தை கோரும் தொழிலாளர் பிரிவினருடன் நிலைமை மோசமடைந்தது. புன்னப்பராவில் உள்ள அப்லான் அரோஜ் என்ற நில உடைமையாளரின் கோரிக்கையின் பேரில் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது, மேலும் அவரது வீட்டிற்கு அருகே நடந்த போராட்டத்தில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் காவல்துறை பாசறையை ஏராளமான ஆர்பாட்டக்காரர்கள் தாக்கினர். இதில் நான்கு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர், சுமார் 35 ஆர்பாட்டக்காரர்களும் கொல்லப்பட்டனர். அரசாங்கம் இராணுவச் சட்டத்தை அறிவித்தது, அதன் பின்னர் இராணுவ நடவடிக்கையில் சுமார் 300 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவங்களின் தொடர் நிகழ்வானது புன்னப்பர-வயலார் எழுச்சி என்று அழைக்கப்படுகிறது. [1] இதை நினைவுகூறும் விதமாக இங்கு புன்னாபிர-வயலார் எழுச்சி தியாகிகளின் தூண் என்ற ஒரு நினைவுச்சின்னம் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும், இந்த தியாகளின் நினைவு நாளன்று அலப்புழாவில் உள்ள வால்யா சுடுகாட்டில் இருந்து இந்த நினைவுச் சின்னம் வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது.