புராணி அவேலி-(மசரத் மகால் அரண்மனை) | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரச அரண்மனை |
இடம் | பழைய நகரம், ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
தற்போதைய குடியிருப்பாளர் | நிஜாம் அருங்காட்சியகம் நகர அருங்காட்சியகம் |
நிறைவுற்றது | பொ.ச. 1880கள் |
புராணி அவேலி (Purani Haveli) மசரத் மகால் அரண்மனை என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது, ஐதராபாத் நிசாம்களின் உத்தியோகபூர்வ இல்லமாகும். இது ஹவேலி கதீம் (பழைய மாளிகை) என்றும் அழைக்கப்பட்டது. மூன்றாம் நிசாம் சிக்கந்தர் ஜா என்பவருக்காக (1803-1829) அவரது தந்தை இரண்டாம் நிசாம் அலி கான் பகதூர் அவர்களால் கட்டப்பட்டது. [1] [2]
ஐதராபாத்தின் இரண்டாவது நிசாம், மிர் நிசாம் அலிகான் இதை 1717 இல் மோமின் வம்சத்தின் இருக்குனுதௌலாவிடம் இருந்து எடுத்துக் கொண்டார். பிரதான கட்டிடம் 18ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கட்டிடக்கலைக்கு ஒரு அடையாளமாகும். அவரது வாரிசான சிக்கந்தர் ஜா இங்கு சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் சௌமகல்லா அரண்மனைக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாக இந்த கட்டிடங்கள் புராணி அவேலி ( பழைய அரண்மனை ) என்று அழைக்கப்படுகின்றன. இந்த கட்டிட வளாகத்தில், "அயினா கானா" (கண்ணாடி மாளிகை) , "சீனி கானா" (சீன கண்ணாடி மாளிகை) ஆகியவை கட்டப்பட்டன. [3] ஆறாவது மற்றும் ஏழாவது நிசாம்கள் இந்த அரண்மனையில் பிறந்து, தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்த அரண்மனையில் கழித்தார்கள்.
இப்போது தென் மண்டல துணைக் காவல் ஆய்வாளர் அலுவலகமும் (ஐதராபாத்), தென் மண்டல பணிக்குழு காவல்துறை கூடுதல் இணை காவல் ஆய்வாளர் அலுவலகமும் இங்கு செயல்பட்டு வருகின்றன.
அவேலி ஆங்கில எழுத்தான "U" வடிவத்தில் உள்ளது. இரண்டு செவ்வகப் பகுதிகள் ஒன்றுக்கொண்டு இணையாக இயங்குகின்றன. மேலும், மற்றும் குடியிருப்புகளும் அரண்மனையின் நடுவில் அமைந்துள்ளது. பிரதான கட்டிடம் 18ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரண்மனைகளை ஒத்திருக்கிறது. இந்த அரண்மனையின் ஒரு தனித்துவமான அம்சம் உலகின் மிக நீளமான மஹபூப் அலி பாஷாவின் புகழ்பெற்ற அலமாரியாகும். இதிலுள்ள உடைகளை அவர் ஒருபோதும் இரண்டாவது முறை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இது உலகின் மிக நீளமான அலமாரி ஆகும். இது இரண்டு நிலைகளில் கையால் கட்டப்பட்ட மர உயரம் தூக்கி (லிப்ட்) மூலம் கட்டப்பட்டுள்ளது. இச்சாதனம் அரண்மனையின் ஒரு பகுதியின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்துள்ளது.
இந்த அரண்மனையில் நிசாமின் அருங்காட்சியகம் உள்ளது. இது ஐதராபாத் மாநிலத்தின் கடைசி நிசாமுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது அரண்மனை ஒரு பள்ளியாகவும் தொழில்துறை பயிற்சி நிறுவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது .