புரு தாதீச் (Puru Dadheech) (புருசோத்தம் தாதீச், 17 சூலை 1939) இவர் ஓர் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய கதக் நடனக் கலைஞராவார். இவர் நன்கு அறியப்பட்ட நடன இயக்குனராகவும் இந்திய பாரம்பரிய நடனத்தின் கல்வியாளராகவும் இருக்கிறார். மேலும் கதக் துறையில் தனது முன்னோடிப் பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. செயல்திறன் கலைகளுக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக ஒரு கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. கலாச்சார அமைச்சினால் தாகூர் தேசிய கூட்டாளர் என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார். [1] தாதீச், லக்னோவின் பட்கண்டே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், நடனத் துறைத் தலைவராகவும், கலை ஆசிரிய பீடமாகவும், கைராகரின் இந்திரா கலா சங்கீத வித்யா வித்யாலயாவில் பணியாற்றினா. பல ஆராய்ச்சி அறிஞர்களுக்கு அவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்காக கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் பணிகளை மேற்கொண்டுள்ளார். [2] கைராகரில் அமைந்துள்ள இந்திரா கலா இசை விஸ்வவித்யாலயா பொது பல்கலைக்கழகத்தில் 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கதக் துறையில், இவர் 1961 இல் முதல் கதக் பாடத்திட்டத்தை நிறுவினார். [3] கதக் நடனத்தில் முதல் முனைவர் பட்டம் பெற்ற இவர், கதக் திறனாய்வில் சாத்திரங்களின் பொருத்தத்தை வலியுறுத்துகிறார் (இந்திய பண்டைய நடனக் கட்டுரைகளான நாட்டியசாஸ்திரம் மற்றும் நந்திகேசுவரனின் அபினய தர்பனா). [4] இவர், கதக்கின் கல்வி முறையின் தந்தையாகவும் அதன் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறார்.
புரு தாதீச், கதக் நிருத்ய கா உத்பவ் அவுர் விகாஸ் என்ற ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைக்காக உலகின் கதக்கில் முதல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். [5]
அகில் பாரதிய காந்தர்வ மகாவித்யாலய மண்டலத்திலிருந்து மகாமகோபாத்யாயைப் பெற்ற முதல் நடனக் கலைஞருமாவார். [6] கதக்கில் முதல் சங்கீதாச்சார்யா என்ற பட்டத்தைத் தவிர, உஜ்ஜைனியின் விக்ரம் பல்கலைக்கழகத்தில் சமசுகிருத நாடகவியலில் 'சமசுகிருத பிரயோக் விஜியன் எவம் காளிதாசியா ரூபக்' என்ற தலைப்பில் இவரது ஆராய்ச்சிக்காக மதிப்புறு முனைவர் பட்டம் பட்டம் பெற்றுள்ளார். இது ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
குரு பண்டிட் துர்கா பிரசாத்,பண்டிட். சுந்தர் பிரசாத் மற்றும் பண்டிட். நாராயண் பிரசாத் ஆகியோரின் கீழ் குரு-சீட பரம்பரையிலும் படித்தார். [7]
புரு தாதீச் உஜ்ஜைனின் (மத்தியப் பிரதேசம்) பாரம்பரிய பௌரானிக பிராமண குடும்பத்தில் பிறந்தார். பிரபல மூத்த கதக் குருவும் ஆராய்ச்சியாளருமான முனைவர் விபா என்பவரை மணந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் பிரத்யுஷ் தாதிச், பிரபலமாக துஷ் தாதீச் என்று அழைக்கப்படுபவர் ஒரு கலைஞர் மேலாளர் மற்றும் பாரம்பரிய இந்திய கலைஞர்கள் மற்றும் கலை வடிவங்களின் அமைப்பாளர் ஆவார், மேலும் பல புதியவர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராகவும் இருக்கிறார். [8]
புரு தாதீச் முதன்முதலில் கதக் பாடத்திட்ட புத்தகங்களை உருவாக்கியுள்ளா. அவை பல்வேறு பல்கலைக்கழகங்களின் கதக் துறையில் நிறுவப்பட்டுள்ளன. [9]
பட்கண்டே இசை நிறுவன பல்கலைக்கழகத்தின் மூத்த கதக் நிபுணரான குரு பி.டி. மோகன்ராவ் கல்லியன் புர்கர் என்பவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். [10] தாதீச் பட்கண்டே இந்துஸ்தானி இசை மகாவித்யாலாவின் ஸ்வர்ன் ஜெயந்தி சாமாரிகா கோல்டன் ஜூபிலி இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். [11]
இவர் பல கருத்தரங்குகளில் பங்கேற்று கொல்கத்தாவின் பிர்லா அகாடமியில் "காளிதாசர் மற்றும் நாட்டிய சாத்திரம்" பற்றிய பேச்சுக்களை வழங்கியுள்ளார். [12]
இவர் இந்தூரின் இசை மற்றும் நடனத்திற்கான, அரசு மகாராணி லக்ஷ்மிபாய் பெண்கள் முதுகலைக் கல்லூரியில் ஏற்பாடு செய்த தேசிய மாநாடு- "இசை மற்றும் நடனத்தில் புதுமை" (23-24, சனவரி 2015) போன்ற பல்வேறு தலையங்கக் குழுவில் பணியாற்றினார். [13]
1988 முதல் கதக்கில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற பல மாணவர்களுக்கு இவர் வழிகாட்டியாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். [14]
இந்தூர் நகரில் நடனம், இலக்கியம் மற்றும் சாத்திரங்கள் துறையில் 'முனைவர் புரு தாதீச்சின் பங்களிப்புகள்' என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்கில் 201சூலை 17 அன்று இவரது 80 வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த கருத்தரங்கின் தலைவராக பத்மசிறீ ஷோவான நாராயண் இருந்தார் . குண்டேச்சா சகோதரர்கள் இவர் எழுதிய மூன்று துருபாத்தை பாடி அஞ்சலி செலுத்தினார்.