புருனேயில் சுற்றுலாவை முதன்மை வளங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகம் நிர்வகிக்கிறது, இது சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் இஸ்லாமிய சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய புருனேயின் சுற்றுலாவை பல்வகைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) பிராந்தியத்தில் புருனே டாலர் வலுவான நாணயங்களில் ஒன்றாகும், இது பிராந்தியத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளை புருனேக்கு வருவதை ஊக்கப்படுத்துகிறது. ஒரு புருனே டாலர் சுமார் 9,740 இந்தோனேசிய ரூபாய், 2.8 மலேசிய ரிங்கிட், 32.9 பிலிப்பைன் பெசோ மற்றும் 25.5 தாய் பாட் ஆகியவற்றுக்கு சமம். சில பயண நிறுவனங்களின் கூற்றுப்படி, புருனேயின் வலுவான நாணய சுற்றுப்பயண தொகுப்புகள் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு விடுதிகள், வாகனங்கள், உணவுகள் போன்ற அனைத்தும் விலை அதிகமாக காணப்படுகிறது. உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மற்ற ஆசியான் நாடுகளை விரும்புகிறார்கள், இருப்பினும் ஆசியானுக்கு வெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் புருனேயை விரும்புகிறார்கள்.[1][2] 2014 ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 95 சதவீதம் பேர் புருனேவுக்கு நிலம் வழியாக வந்தனர்; நான்கு சதவீதம் விமானம் மூலமாகவும், ஒரு சதவீதம் கடல் வழியாகவும் வந்துளனர்.[3]
புருனே அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் சுற்றுலாவுக்கு 300,000 டாலர் வரவு செலவுத் திட்டத்தை மேற்கொண்டது. மேலும் நாட்டின் தேசிய மேம்பாட்டுத் திட்டத்திலும் (என்டிபி) சுற்றுலாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.[4] புருனே சுற்றுலாவில் அன்னிய நேரடி முதலீடு மற்றும் பல நிறுவனங்களுடன் ஒத்துழைக்க முயல்கிறது.[3]
டுடோங் இலக்கு திட்டம் என்பது நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான டுடோங் மாவட்டத்தில் சுற்றுலாவை அதிகரிக்கும் ஒரு பைலட் திட்டமாகும். பயண முகவர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட அரசு உருவாக்கிய இந்த திட்டம் 2013 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் டுடோங்கிற்கு (30 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது) பார்வையிட வருகை புரிந்துள்ளனர்.[5][6] புருனே-இந்தோனேசியா-மலேசியா-பிலிப்பைன்ஸ் கிழக்கு ஆசியான் வளர்ச்சி பகுதியின் (BIMP-EAGA) 50 பிரதிநிதிகள் இந்த மாவட்டத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர்.[7]
பறவைக் கண்காணிப்பு என்பது புருனே சுற்றுலா மிகப்பெரியத் திட்டங்களில் அடையாளம் காணப்பட்ட இயற்கை சுற்றுலாவின் ஒரு அம்சமாகும். சன்ஷைன் போர்னியோ டூர்ஸ் அண்ட் டிராவல், மலேசிய நேச்சர் சொசைட்டி (எம்.என்.எஸ்), பறவைகள் பாதுகாப்பு அமைப்பு (பி.சி.சி) மற்றும் புருனே பறவைகள் குழுவின் தன்னார்வலர்களுடன் இணைந்து புருனே சுற்றுலா மேம்பாட்டுத் துறையால் 2015 ஆம் ஆண்டில் மூன்று நாள் பறவைக் கண்காணிப்பு பட்டறை வழங்கப்பட்டது.[8]
இசுலாம் புருனேயின் அரச மதம், சுற்றுலாப் பயணிகள் இஸ்லாமிய ஆசாரங்களை கடைபிடிக்க வேண்டும். பழமைவாத மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் அடக்கமாக உடை அணிய வேண்டும். ரமலான் மாதத்தில், பார்வையாளர்கள் பகல் நேரங்களில் பொது இடங்களில் குடிக்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படுவதில்லை. புருனேயில் உள்ள பெரும்பாலான முக்கிய சுற்றுலா தலங்கள் இசுலாமிய மசூதிகள். சரியான உடையில் முசுலிம் அல்லாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மசூதிகளுக்குள் நுழையலாம்; பெண்கள் தலை, தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்க வேண்டும். புருனேயில் மது விற்பனை தடைசெய்யப்பட்டிருந்தாலும், 17 வயதுக்கு மேற்பட்ட முசுலிமல்லாதவர்கள் இரண்டு பாட்டில்கள் மது அல்லது மது மற்றும் 12 கேன்கள் பீர் ஆகியவற்றை நாட்டிற்கு கொண்டு வரலாம்; ஒவ்வொரு இறக்குமதிக்கும் இடையில் 48 மணிநேரம் கழிக்க வேண்டும்.[9][10][11]
புருனே சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார, பாரம்பரியம் மற்றும் இஸ்லாமிய சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது.