புருவாஸ் (P068) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Beruas (P068) Federal Constituency in Perak | |
![]() | |
மாவட்டம் | மஞ்சோங் மாவட்டம் ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 108,249 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | புருவாஸ் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | புருவாஸ், பந்தாய் ரெமிஸ், பாரிட், கம்போங் கோத்தா, புருவாஸ் அருங்காட்சியகம் |
பரப்பளவு | 754 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | நிகே கூ காம் (Ngeh Koo Ham) |
மக்கள் தொகை | 119,756 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
புருவாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beruas; ஆங்கிலம்: Beruas Federal Constituency; சீனம்: 瓜拉江沙 联邦选) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P068) ஆகும்.[7]
புருவாஸ் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து புருவாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
புருவாஸ் நகரம் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.
முன்பு காலத்தில் தமிழர்கள் இந்த நகரைப் புருவாஸ் என்று அழைத்தார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர் புருவாஸ் எனும் சொல்லுக்கு மாறாகப் பெருவாஸ் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
புருவாஸ் நகரம் மலேசிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். இங்கு வாழ்ந்த கிராமவாசிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கங்கா நகரம் தொடர்பான பல அரிய கலைப் பொருட்களைக் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த நகரில் 5-ஆம்; 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல பொருட்கள் புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
புருவாஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1959-ஆம் ஆண்டில் டிண்டிங்ஸ் தொகுதியில் இருந்து புருவாஸ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
புருவாஸ் | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P044 | 1959–1963 | இயோ தாட் பெங் (Yeoh Tat Beng) |
சுயேச்சை |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P044 | 1963–1964 | இயோ தாட் பெங் (Yeoh Tat Beng) |
சுயேச்சை |
2-ஆவது மக்களவை | 1964–1966 | மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) | ||
1966–1969 | சியூ பியோ சுவான் (Chew Biow Chuon) | |||
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P044 | 1971–1973 | சூ லியாங் யூ (Su Liang Yu) |
மக்கள் முற்போக்கு கட்சி |
1973–1974 | பாரிசான் நேசனல் (மக்கள் முற்போக்கு கட்சி) | |||
4-ஆவது மக்களவை | P056 | 1974–1978 | ||
5-ஆவது மக்களவை | 1978–1982 | திங் செக் மிங் (Ting Chek Ming) |
ஜனநாயக செயல் கட்சி | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | மைக்கல் சென் விங் (Michael Chen Wing) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) | |
புருவாஸ் | ||||
7-ஆவது மக்களவை | P062 | 1986–1990 | லிம் கெங் யெக் (Lim Keng Yaik) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P065 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P068 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | நிகே கூ காம் (Ngeh Koo Ham) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
108,249 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
73,483 | 66.17% | ▼ - 11.05% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
72,173 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
186 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,124 | ||
பெரும்பான்மை (Majority) |
33,971 | 47.07% | ![]() |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
நிகே கூ காம் (Ngeh Koo Ham) |
பாக்காத்தான் | 72,173 | 46,710 | 64.72% | - 3.75% ▼ | |
ஓங் கியான் சிங் (Ong Kean Sing) |
பெரிக்காத்தான் | - | 12,739 | 17.65% | + 17.65% ![]() | |
திங் சியூ சி (Ding Siew Chee) |
பாரிசான் | - | 12,724 | 17.63% | - 4.40 % ▼ |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)