புருஷ லட்சணம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | எம். நரேந்திரன் |
கதை | கே. எஸ். இரவிக்குமார் |
இசை | தேவா |
நடிப்பு | ஜெயராம் (நடிகர்) குஷ்பூ அஞ்சு ஸ்ரீவித்யா ஆர். சுந்தர்ராஜன் இராஜா இரவீந்தர் கே. எஸ். இரவிக்குமார் |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | குட் லக் பிலிம்ஸ் |
விநியோகம் | குட் லக் பிலிம்ஸ் |
வெளியீடு | 3 திசம்பர் 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புருஷ லட்சணம் (Purusha Lakshanam) என்பது 1993 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார். படமானது 1993 திசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3] இது தெலுங்கில் பலே பெல்லாம் என்றும் கன்னடத்தில் மங்கல்ய பந்தனா என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
நந்தகோபால் ( ஜெயராம் ) ஒரு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிகிறார். கல்லூரி மாணவியான அம்மு என்று அழைக்கப்படும் அபிராமி ( குஷ்பூ ) முதல் பார்வையில் நந்தகோபாலைக் காதலிக்கிறார். அஞ்சுவும் நந்தகோபாலை ஒரு தலையாக காதலிக்கிறார். இறுதியாக, நந்தகோபாலும் அம்முவும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்கின்றனர். ராஜா (ராஜா ரவீந்தர்) அம்முவின் வகுப்புத் தோழர், அம்முவை ஒரு காதலித்து வந்தார். தனக்கு கிடைக்காத அம்முவைப் பழிவாங்க ராஜா விரும்புகிறார்.
ராஜா அம்முவை திருமணம் செய்து கொள்வதாக சவால் விடுகிறார். ஒரு நாள், ராஜா நந்தகோபாலின் முன்னிலையில் அம்முவைக் கட்டிப்பிடிக்கிறார். இதனால் நந்தகோபால் தனது மனைவிக்கு ராஜாவுடன் தவறான உறவு இருப்பதாக நினைத்து அம்முவை தன்னை விட்டு விலக்குகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.
இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை காளிதாசன் எழுதியுள்ளார்.[4][5]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
---|---|---|---|---|
1 | அண்ணா சாலை | சித்ரா | காளிதாசன் | 04:51 |
2 | "காக்கைச் சிறகினிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 04:42 | |
3 | "கும் கும் கும்பகோணம்" | எஸ். ஜானகி | 04:20 | |
4 | "முந்தானையே நான்" | மனோ | 04:57 | |
5 | "ஒரு தாலி" | சித்ரா | 05:22 | |
6 | "செம்பட்டு பூவே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 04:12 |
இந்தியன் எக்ஸ்பிரஸ் பின்வருமாற எழுதியது "பி. வாசுவின் கதை திருப்பங்கள் நிறைந்ததாக உள்ளது. இது இயக்குனருக்கு ஒரு பிடிப்பை அளிக்கிறது [..] மேலும் பார்வையாளர்களை கதையோடு ஒன்ற வைப்பதில் வெற்றிபெறுகிறது." [6] நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குஷ்பூவின் நடிப்பைப் பாராட்டியதுடன், ரவிக்குமாரின் இயக்கத்தையும் அது பாராட்டியது. "படத்தின் முதல் மூன்று கால் பகுதிகள் படத்தின் வேகத்தை இலகுவாகவும் மகிழ்ச்சியான மனநிலையைக் கொண்டதாகவும் இருந்தது".[7]