நூலாசிரியர் | பால் லிஞ்ச் |
---|---|
நாடு | அயர்லாந்து |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | ஒன்வேர்ல்டு பப்ளிகேசன்சு[1] |
ISBN | 9780861546459 |
புரோஃபெட் சாங் (Prophet Song)என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் எழுதிய டிஸ்டோபியன் புதினம் ஆகும். இது ஒன்வேர்ல்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அயர்லாந்து குடியரசு சர்வாதிகாரத்திற்குள் நழுவும்போது தனது குடும்பத்தை காப்பாற்ற முயற்சிக்கும் நான்கு குழந்தைகளுக்கு தாயான எலிஷ் ஸ்டாக் உட்பட ஸ்டாக் குடும்பத்தின் போராட்டங்களை இந்த புதினம் சித்தரிக்கிறது. கதையானது வழக்கத்திற்கு மாறான முறையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதினத்தில் பத்தி இடைவெளிகள் இல்லை. புத்தகம் 2023 புக்கர் பரிசை வென்றது.[2]
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான முக்கிய உத்வேகங்களில் ஒன்று சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் அகதிகள் நெருக்கடி மற்றும் மேற்கு நாடுகளின் அகதிகளின் அவலநிலை பற்றிய அக்கறையின்மை என்று லிஞ்ச் கூறியுள்ளார். [3] லிஞ்ச் தனது முதல் டிஸ்டோபியன் புதினத்தை எழுதுவதற்கான உத்வேகமாக ஜெர்மன் எழுத்தாளர் ஹேர்மன் ஹேசேயின் பணியை மேற்கோள் காட்டியுள்ளார். [4]
எதிர்கால அயர்லாந்து குடியரசில், ஆசிரியர் சங்க வேலைநிறுத்தத்தை அடுத்து, வலதுசாரி தேசியக் கூட்டணி கட்சி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. தேசியக் கூட்டமைப்பு ஐரிஷ் தேசிய காவல்துறைக்கும் ( கார்டா சியோச்சனா ) நீதித்துறைக்கும் தொலைநோக்கு அதிகாரங்களை வழங்குகிறது. ஆட்சியானது கார்டா தேசிய சேவைகள் பணியகம் என்ற புதிய இரகசிய பொலிஸ் படையையும் நிறுவுகிறது. புதிய அரசாங்கம் குடிமை உரிமைகளை விரைவாக நீக்கம் செய்கிறது; அமைதியான போராட்டங்கள் உடைக்கப்படுகின்றன, மேலும் ஐரிஷ் குடிமக்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
ஒரு ஆசிரியரும் தொழிற்சங்கத் தலைவருமான லாரி இசுடாக்கு, பேரணியில் கலந்துகொண்டபோது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். அறிவியலாளரான அவரது மனைவி எலிஷ், அவர்களின் நான்கு குழந்தைகளையும், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையையும் கவனித்துக்கொள்கிறார். எலிஷ் தனது கணவரின் விடுதலைக்காக மனு செய்கிறார். மாநிலம் விரைவில் உள்நாட்டுப் போரில் இறங்குகிறது, மேலும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக சந்தேகிக்கப்படும் ஐரிஷ் குடிமக்கள் கைது செய்யப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். உள்நாட்டுப் போரின் போது எலிஷ் தனது குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கப் போராடுகிறார்; அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற நினைக்கிறார், முடிந்தால் கனடாவில் உள்ள தனது சகோதரி ஐனுடன் சேரலாம் என்றும் நினைக்கிறார்.
இந்த புதினம் 2023 புக்கர் பரிசை வென்றது, நடுவர் குழுவின் தலைவரான எசி எடுக்யன், இந்தப் படைப்பு "வலிமையையும் துணிச்சலையும் உண்டாககும் தன்மை கொண்ட உணர்ச்சிகரமான கதைசொல்லலின் வெற்றி" என்று கூறியுள்ளார். புதினத்தில் போர் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த புலம்பெயர்ந்தோர் நெருக்கடியின் சித்தரிப்பு குறித்து, எடுக்யன் கூறும் போது "நமது தற்போதைய தருணத்தின் சமூக மற்றும் அரசியல் கவலைகளைப் படம்பிடிக்கிறது" என்று கூறியுள்ளார். [2] புக்கர் பரிசை வென்ற ஆறாவது ஐரிஷ் எழுத்தாளர் லிஞ்ச் ஆவார்.
{{cite web}}
: Missing or empty |title=
(help); Missing or empty |url=
(help)
{{cite web}}
: Missing or empty |title=
(help); Missing or empty |url=
(help)