புரோட்டியோபீடியா (Proteopedia) என்பது புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளின்விக்கி, முப்படிமாண கலைக்களஞ்சியம் ஆகும்.[1][2][3][4] புரத தரவு வங்கியில் (>130,000 பக்கங்கள்) உள்ள ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு பக்கத்தினை இத்தளம் கொண்டுள்ளது. அசிடைல்கொலினெசுடெரேசு,[5]கீமோகுளோபின்[6] மற்றும் ஒளிச்சேர்க்கை அமைப்பு II[7] போன்ற புரதக் கட்டமைப்புகளின் விளக்கமான பக்கங்களும் இந்தத் தளத்தில் உள்ளன. செயல்பாட்டுத் தளங்கள் மற்றும் ஈந்தணைவிகளை முன்னிலைப்படுத்தும் ஜெமால் (Jmol) பார்வையுடன். தனிப்பயனாக்கப்பட்ட மூலக்கூறு காட்சிகளை உருவாக்கப் பயனர்கள் ஜெஎசுமால் நிரை மொழியைக் கற்க வேண்டியதில்லை. தனிப்பயன் காட்சிகள் ஜெஎசுமாலில் காட்சிகளைக் காண்பிக்கும் விளக்க உரையில் "பச்சை இணைப்புகளுடன்" எளிதாக இணைக்கப்படும். இணைய உலாவி இத்தளத்தையும் 3D தகவலையும் அணுகுவதற்குத் தேவையானது. ஆனால் பார்வையாளர்கள் இதனை நிறுவ வேண்டிய அவசியமில்லை.
↑Martz E (2009). "Proteopedia.Org: a scientific "Wiki" bridging the rift between 3D structure and function of biomacromolecules". Biopolymers92 (1): 76–7. doi:10.1002/bip.21126. பப்மெட்:19117028.
↑"Proteopedia: A collaborative, virtual 3D web-resource for protein and biomolecule structure and function". Biochemistry and Molecular Biology Education38 (5): 341–2. 2010. doi:10.1002/bmb.20431. பப்மெட்:21567857.
↑Prilusky, J; Hodis, E.; Canner, D.; Decatur, W. A.; Oberholser, K.; Martz, E.; Berchanski, A.; Harel, M. et al. (Aug 2011). "Proteopedia: A status report on the collaborative, 3D web-encyclopedia of proteins and other biomolecules". Journal of Structural Biology175 (2): 244–252. doi:10.1016/j.jsb.2011.04.011. பப்மெட்:21536137.