புரோப்பீனைல் (Propenyl) என்பது RCH=CHCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் எந்தவொரு கரிம வேதியியல் சேர்மத்தையும் குறிக்கும். ஒருபக்க மற்றும் மறுபக்க-1-குளோரோபுரோப்பீன், β-மெத்தில்சிடைரீன் எனப்படும் புரோபீனைல்பென்சீன் உள்ளிட்ட பல புரோப்பீனைல் சேர்மங்கள் அறியப்படுகின்றன. [1] RCH2-CH=CH2 என்ற வாய்ப்பாட்டால் அறியப்படும் அல்லைல் சேர்மங்களுடன் சமபகுதிச் சேர்மங்களாகவும் அவற்றை விட பொதுமையற்றும் இவை காணப்படுகின்றன.