புரோப்பேனாயில் குளோரைடு (Propanoyl chloride) என்பது C3H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். மூன்று கார்பன் கொண்ட சங்கிலியால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது [1][2]. அசைல் குளோரைடுகளுக்கு அடையாளமாகக் குறிக்கப்படும் அத்தனை வினைகளிலும் இது ஈடுபடுகிறது [3].
நிறமற்றதாகவும் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் அரிப்புத் தன்மை கொண்ட ஒரு நீர்மமாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது.