பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோப்பைலீன் டைநைட்ரேட்டு
| |
வேறு பெயர்கள்
புரோப்பேன்-1,2-டையில் டைநைட்ரேட்டு;
1,2-பிசு(நைட்ராக்சி)புரோப்பேன் | |
இனங்காட்டிகள் | |
6423-43-4 | |
ChEMBL | ChEMBL206527 |
ChemSpider | 21472 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22933 |
| |
பண்புகள் | |
C3H6N2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 166.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
மணம் | விரும்பத்தகாத்து[1] |
அடர்த்தி | 1.232 கி/செ.மீ³ (20 °செல்சியசில்)[2] |
உருகுநிலை | −27.7 °C (−17.9 °F; 245.5 K) [2] |
கொதிநிலை | 121 °C (250 °F; 394 K) கொதிநிலைக்கு முன் சிதைவடையும் |
0.1% (20°செ)[1] | |
ஆவியமுக்கம் | 0.07 மி.மீ. பாதரசம் (22°செ)[1] |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
930 மி.கி கி.கி−1 (அடிவயிற்றில் ஊசியாக எலிக்கு)[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.05 ppm (0.3 மி.கி/மீ3) [skin][1] |
உடனடி அபாயம்
|
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோப்பைலீன் கிளைக்கால் டைநைட்ரேட்டு (Propylene glycol dinitrate) என்பது C3H6N2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,2-புரோப்பைலீன் கிளைக்கால் டைநைட்ரேட்டு, 1,2-புரோப்பேண்டையால் டைநைட்ரேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. புரோப்பைலீன் கிளைக்கால் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய சேர்மங்கள் சேர்ந்த நைட்ரேட்டு எசுத்தராக இது கருதப்படுகிறது. ஒரேயொரு நைட்ரேட்டு குழுவை குறைவாகப் பெற்ற நைட்ரோ கிளிசரினின் கட்டமைப்பையே புரோப்பைலீன் கிளைக்கால் டைநைட்ரேட்டும் பெற்றுள்ளது. விரும்பத்தகாத மணம் கொண்ட இச்சேர்மம் [4] ஒரு நிறமற்ற திரவமாகும். கொதிநிலைக்கு கீழே 121 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது. தீப்பிடித்து எரியக்கூடியதாகவும் வெடிக்கும் இயல்பையும் கொண்டுள்ளது. அதிர்ச்சியை உணரும் திறன் கொண்ட்தாக வினையில் ஈடுபட்டு நீராவி, கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரசன் வாயு போன்றவற்றை உருவாக்குகிறது.
2-நைட்ரோடைபீனைலமீன் மற்றும் டைபியூட்டைல் செபாக்கேட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து ஓட்டோ எரிபொருள் II இல் ஒரு உந்துபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்டோ எரிபொருள் II சில நீர்மூழ்கிக் குண்டுகளில் உந்துபொருளாக பயன்படுத்தப்படுகிறது [3] [5]
பாலியைதரிக் ஆல்க்கால்களின் நைட்ரேட்டுகளில் ஒன்றான புரோப்பைலீன் கிளைக்கால் டைநைட்ரேட்டு மருத்துவத் துறையில் மார்பு நெரிப்பு நோய்க்கான சிகிச்சையிலும் வெடிபொருளாகவும் 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி பயன்படுத்தப்படுகிறது.
இரத்த அழுத்தத்தில் பாதிப்பையும் சுவாச நச்சுத்தன்மையையும் புரோப்பைலீன் கிளைக்கால் டைநைட்ரேட்டு ஏற்படுத்துகிறது, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் பார்வை சிதைவு மெத்தோகுளோபினூரியா, தலைவலி மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. தோல் வழியாக இது உடலுக்குள் உறிஞ்சப்படலாம். மெத்தெமோகுளோபினிமியா எனப்படும் இரத்த இரும்பு பற்றாக்குறை நோய் இதன் முதன்மையான நச்சுத்தன்மை பொறிமுறையாகும். நிரந்தர நரம்பு சேதத்தையும் இது ஏற்படுத்தக்கூடும்.
தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனம், எட்டு மணிநேர வேலை நாளில் தோலின் மீது மில்லியனுக்கு 0.05 பகுதிகள் அளவு வெளிப்படலாம் எனத் தொழில்சார் வெளிப்பாட்டு அளவாக பரிந்துரைக்கிறது[6]