புரோமின் நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமின் மோனோநைட்ரேட்டு, புரோமோ நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
40423-14-1
ChemSpider
110090
InChI=1S/BrNO3/c1-5-2(3)4 Key: RRTWEEAEXPZMPY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
123495
பண்புகள்
BrNO3
வாய்ப்பாட்டு எடை
141.91 கி/மோல்
தோற்றம்
மஞ்சள் நீர்மம்
உருகுநிலை
−42 °C (−44 °F; 231 K)
கொதிநிலை
0 °C (32 °F; 273 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
புரோமின் நைட்ரேட்டு (Bromine nitrate ) BrNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். புரோமின் மோனோ நைட்ரேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். புரோமினும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் நீர்மமாக உருவாகிறது. புரோமின் நைட்ரேட்டு 0 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் சிதைவடைகிறது.[ 1]
1. வெள்ளி நைட்ரேட்டு சேர்மத்துடன் புரோமினின் ஆல்ககால் கரைசலை சேற்த்து வினைபுரியச் செய்தால் புரோமின் நைட்ரேட்டு கிடைக்கிறது. :
Br2 + AgNO3 → BrNO3 + AgBr
2. புரோமின் ஒற்றைக்குளோரைடு சேர்மத்துடன் குளோரின் நைட்ரேட்டு சேர்மத்தை தாழ் வெப்பநிலையில் வினைபுரியச் செய்து புரோமின் நைட்ரேட்டைத் தயாரிக்கலாம்:
BrCl + ClNO3 → BrNO3 + Cl2
புரோமின் மோனோ நைட்ரேட்டு நிலையற்ற மஞ்சள் நீர்மமாக உருவாகிறது. இது 0 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் சிதைகிறது.
BrONO2 கட்டமைப்பில் புரோமின் நைட்ரேட்டு காணப்படுகிறது.[ 2] [ 3]
முக்குளோரோபுளோரோமெத்தேன், கார்பன் டெட்ராகுளோரைடு ஆகிய கரைப்பான்களில் புரோமின் மோனோ நைட்ரேட்டு நன்றாகக் கரையும்.
கந்தக அமிலத்துடன் வினைபுரிவதால் புரோமின் நைட்ரேட்டு அடிவளிமண்டல வேதியியலில் முக்கிய பங்கு வகிக்கிறது:[ 4] [ 5]
↑ "Bromine nitrate properties - SpringerMaterials" . materials.springer.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021 .
↑ Colussi, Agustín J.; Grela, María A. (1998). "Thermochemical kinetics of bromine nitrate, bromine nitrite, halogen hydroperoxides, dichlorine pentoxide, peroxycarboxylic acids, and diacyl peroxides" (in en). International Journal of Chemical Kinetics 30 (1): 41–45. doi :10.1002/(SICI)1097-4601(1998)30:1<41::AID-KIN5>3.0.CO;2-U . பன்னாட்டுத் தர தொடர் எண் :1097-4601 . https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/%28SICI%291097-4601%281998%2930%3A1%3C41%3A%3AAID-KIN5%3E3.0.CO%3B2-U . பார்த்த நாள்: 31 October 2021 .
↑ Parthiban, Srinivasan; Lee, Timothy J. (8 July 1998). "Ab initio investigation of the atmospheric molecule bromine nitrate: Equilibrium structure, vibrational spectrum, and heat of formation" . The Journal of Chemical Physics 109 (2): 525–530. doi :10.1063/1.476589 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0021-9606 . https://aip.scitation.org/doi/10.1063/1.476589 . பார்த்த நாள்: 31 October 2021 .
↑ Sander, R.; Rudich, Y.; Glasow, R. von; Crutzen, P. J. (1999). "The role of BrNO3 in marine tropospheric chemistry: A model study" (in en). Geophysical Research Letters 26 (18): 2857–2860. doi :10.1029/1999GL900478 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1944-8007 . https://agupubs.onlinelibrary.wiley.com/doi/abs/10.1029/1999GL900478 . பார்த்த நாள்: 31 October 2021 .
↑ Spencer, John E.; Rowland, F. S. (1 January 1978). "Bromine nitrate and its stratospheric significance" . The Journal of Physical Chemistry 82 (1): 7–10. doi :10.1021/j100490a002 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-3654 . https://pubs.acs.org/doi/10.1021/j100490a002 . பார்த்த நாள்: 31 October 2021 .