புரோமோடெர்மா (Bromoderma) என்பது தோலின் மேல் தோலில் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் வெடிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படும் ஒரு நிலையாகும்[1]:135. இது சில மருந்துகளில் காணப்படும் புரோமைடுகளுக்கு அதிக உணர்திறன் காரணமாக ஏற்படுகிறது. புரோமினேற்றம் செய்யப்பட்ட காய்கறி எண்ணெயைக் கொண்ட ஒரு குளிர்பானத்தை அதிகமாக உட்கொள்வதால் புரோமோடெர்மா நிலை குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுகிறது[2].