புரோமோபுளோரோகார்பன்கள் (Bromofluorocarbons) என்பவை கார்பன், புரோமின் மற்றும் புளோரின் அணுக்கள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகளாகும். இவை பெரும்பாலும் தீயடக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன[1]. ஏலோன் என்ற வணிகக் குறியீட்டுப் பெயர் கொண்ட வேதிப்பொருள் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அனைத்து ஏலோன்களும் புரோமோபுளோரோகார்பன்களைக் கொண் டிருப்பதில்லை. சில ஏலோன்கள் குளோரினையும் பெற்றுள்ளன.
குளோரோபுளோரோகார்பனைவிட அதிகமாகவும் வன்மையாகவும் புரோமோபுளோரோகார்பன்கள் ஒசோன் அடுக்குகளைப் பாதிக்கின்றன[2] . ஆனாலும் சில கப்பல்களிலும் வானூர்திகளிலும் புரோமோபுளோரோகார்பன்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவற்றிற்கு மாற்றாக கிடைப்பவை இதனளவிற்கு திறனுள்ளவையாக இருக்கவில்லை. மொண்டிரியால் நெறிமுறையின்படி[1] புரோமோபுளோரோகார்பன்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் எஞ்சியிருக்கும் பழைய இருப்பை மறுசுழற்சி முறையில் தயார்படுத்தி பயன்படுத்தி வருகின்றனர்.[3]
புரோமோபுளோரோகார்பன்கள் மிகவும் மந்தமானவையாகும். தீயின்போது இவை, ஆக்சிசனை எரிதலுக்குள் வரவிடாமல் தடுப்பது மட்டுமின்றி புரோமின் தனியுறுப்புகளை வெளியேற்றுகின்றன. இவ்வுறுப்புகள் எரிதல் வினையில் தலையிட்டு தடைசெய்கின்றன. முழுவதுமாக புளோரினேற்றம் செய்யப்பட்ட மூலக்கூறுகளுடன் ஒப்பிடுகையில் புரோமோபுளோரோகார்பன்கள் அதிக கொதிநிலையும் உருகுநிலையும் கொண்டுள்ளன.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)