புலாவ் செபாங் | |
---|---|
மலாக்கா | |
Pulau Sebang | |
ஆள்கூறுகள்: 2°28′0″N 102°14′0″E / 2.46667°N 102.23333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
தொகுதி | அலோர் காஜா மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 78000 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
புலாவ் செபாங் என்பது (மலாய்: Pulau Sebang; ஆங்கிலம்: Pulau Sebang; மலேசியா, மலாக்கா மாநிலத்தில், அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரம்.
நெகிரி செம்பிலான், தம்பின் மாவட்டம், தம்பின் நகரின் எல்லையுடன் இணைந்து உள்ளது. மலாக்கா நகரில் இருந்து 32 கி.மீ.; அலோர் காஜா நகரில் இருந்து 9 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
1905 முதல் 1942 வரை, புலாவ் செபாங் நகரில் இருந்து மலாக்கா நகருக்கு இரயில் பாதை இருந்தது, ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானியர்களால் அந்த இரயில் பாதை பெயர்க்கப்பட்டது.
சயாம் மரண இரயில்பாதை போடப் படுவதற்காக, புலாவ் செபாங் நகரில் இருந்து மலாக்கா நகர் வரையிலான இரயில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டன.[1]
முந்தைய இரயில் பாதை வழித் தடங்கள்; மற்றும் ஆற்றின் குறுக்கே போடப்பட்ட இரயில் பாலங்கள் இன்றும் உள்ளன. மலாக்கா நகரத்திற்கான இரயில் பாதையை மீண்டும் திறக்க மலாக்கா அரசாங்கம் திட்டம் வகுத்து உள்ளது.
மலாக்கா மாநிலத்தில் இப்போது, இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே, இரயில் வண்டிச் சேவைகள் உள்ளன. அவற்றுள் புலாவ் செபாங் ஓர் இடமாகும்.[2]
மலாக்கா; அலோர் காஜா மாவட்டம், புலாவ் செபாங் பகுதியில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 146 மாணவர்கள் பயில்கிறார்கள். 25 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
MBD0064 | புலாவ் செபாங் | SJK(T) Ladang Gadek[4] | காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 37 | 10 |
MBD0068 | புலாவ் செபாங் | SJK(T) Pulau Sebang[5] | புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 109 | 15 |