புல்மோனி தாசி வன்கலவி வழக்கு (Phulmoni Dasi rape case) 1889 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுவர் திருமணம் மற்றும் அடுத்தடுத்த நடைபெற்ற திருமண வன்கலவி, இதன் விளைவாக 10 வயது சிறுமி புல்மோனி தாசி இறந்த நிகழ்வினையும் குறிக்கும் வழக்காகும். [1] இந்த வழக்கு 1890 ஆம் ஆண்டில் அந்த சிறுமியின் கணவனை தண்டிக்க வழிவகுத்தது மற்றும் ஏற்கனவே இருந்த வன்கலவி, சிறுவர் திருமணம் தொடர்பான , பல சட்டங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்தது. [2]
சிறுமி புல்மோனி தாசி அதீத இரத்தப் போக்கு ஏற்பட்டதாலேயே அவர் இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கணவருக்கு முப்பது வயது (சரியான வயது தெரியவில்லை) இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அவர் சிறுமியாக இருந்தபோதிலும் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தச் சிறுமியின் கணவர் ஹர் மோகன் சுமார் இருபது வயது வித்தியாசம் இருந்த போதிலும் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் காயமடைந்த யோனியே மரணத்திற்கு காரணம் என தெளிவாக சுட்டிக்காட்டினாலும், கற்பழிப்பு சட்டத்தில் திருமண பாலியல் பலாத்காரம் [3] விலக்களிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் கணவர் பின்னர் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இது வன்கலவி தொடர்பான இந்தியச் சட்டங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற விவாதத்தினை உருவாக்கியது.
புல்மோனி தாசி எனும் ஒரு பத்து வயது வங்காள பெண்ணுக்கு, ஹரி மோகன் மைதி என்ற 30 வயது ஆணுடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் சுமார் இருபது ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்த போதிலும் இந்த சிறுவர் திருமணம் ஹரி மோகனின் ஒப்புதலுடன் நடைபெற்றுள்ளது இந்த சிறுவர் திருமணம் நடைபெற்ற பின்னர் மணவுறவு நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது புல்மோனி தாசிக்கு அதீத உதிரப்போக்கு ஏற்பட்டது. பின்னர் புல்மோனா தாசி இறந்துள்ளார். [1] [4] [5] 1980 ஆம் ஆண்டில் இந்த வழக்கானது பரவலான கவனத்தினைப் பெற்றது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் வன்கலவி தொடர்பான சட்டங்களில் பல சீர்திருடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த வழக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த வழக்கு 6 ஜூலை 1890 அன்று கல்கத்தா குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. [6] சிறுமியின் தாய் கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். [5] இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 338 ன் கீழ் ஹரி மோகன் மைதி "உயிருக்கு அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலால் கடுமையான காயத்தை ஏற்படுத்தினார்" என்று குற்றம் சாட்டப்பட்டார். [2] 1860 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 இல் விதிவிலக்கு உட்பிரிவின் கீழ், சொந்த மனைவியுடன் உடலுறவு கொள்வது வன்கலவி செய்யப்பட்டதாக கருதப்படாது. [6] இந்தக் காரணத்தினால் கடுமையான தண்டனைகளில் இருந்து ஹரி மோகன் மைதி தப்பித்தார். இது பல்வேறு மக்களிடையே இந்திய வன்கலவி தண்டனைச் சட்டத்தின் மீது பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்க வழிவகுத்தது. மேலும், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.புல்மோனி சட்ட வயதுடையவராக இருந்ததாலும், மைதியை திருமணம் செய்தவராகவும் இருந்ததால், அவருக்கு 12 மாத கடின உழைப்பு தண்டனையாக விதிக்கப்பட்டது. [5] இந்த வழக்கு பேரரசி v ஹரி மோகன் மைதி என அழைக்கப்படுகிறது. . [4]