பி.இ-4 | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | {{{function}}} |
அமைப்பு | ப்ளூ ஆர்ஜின் |
நாடு | {{{country-origin}}}
|
ஏவு வரலாறு | |
நிலை | |
ஏவல் பகுதி | {{{sites}}} |
பி.இ-4 (ஆங்கிலம்: BE-4 அல்லது Blue Engine 4) என்பது தற்போது தயாரிப்பில் இருக்கும் மிகப் பெரிய செலுத்து வாகன இயந்திரம் ஆகும். இவ்வியந்திரம் ப்ளூ ஆர்ஜின் (Blue Origin) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வியந்திரம் 2,400 கிலோநியூட்டன் உந்துகை சக்தியைத் தர வல்லது. இதன் முதல் பயன்பாடு 2019 ஆம் ஆண்டு எனத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் இவ்வியந்திரம்ப்ளூ ஆர்ஜின் (Blue Origin) நிறுவனத்தின் செலுத்து வாகனங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டது, பின்னர் அட்லஸ் வி செலுத்து வாகத்திலும் பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இவ்வியந்திரத்தை உருவாக்கும் முயற்சி 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியந்திரத்தில் திரவ ஆக்ஸிஜனும் திரவ மீத்தேனும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இவ்வியந்திரத்தின் தயாரிப்பைப் பற்றிய விவரங்களை ப்ளூ ஆர்ஜின (Blue Origin) நிறுவனம் வெளியிடவில்லை.[1]. [2] [3]