புளூம் ஆற்றல் வழங்கி

புளூம் ஆற்றல் வழங்கி (Bloom Energy Server) என்பது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புளூம் எனர்ஜி எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் திட ஆக்சைடு எரிபொருள் கலம்[1] ஆகும். இது சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில் மின்னாற்றல் உற்பத்தி செய்யும் அமைப்பு.[2] கூகுள், வால்மார்ட் போன்ற இடங்களில் இந்த ஆற்றல் வழங்கிகள் பலவற்றை நிறுவி உள்ளதாக இந் நிறுவனம் சொல்கிறது.[3]

புளூம் எனர்ஜி நிறுவனத்தை நிறுவியவர் கே. ஆர். ஸ்ரீதர் என்பவர் ஆவார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]