| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
டிரையசாடையீனைல் புளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
14986-60-8 | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 23235952 | ||
| |||
பண்புகள் | |||
FN3 | |||
வாய்ப்பாட்டு எடை | 61.019 கி/மோல் | ||
தோற்றம் | மஞ்சள் பச்சை வாயு | ||
உருகுநிலை | −139 °C (−218 °F; 134 K) | ||
கொதிநிலை | −30 °C (−22 °F; 243 K) | ||
Explosive data | |||
Shock sensitivity | அதிகம் | ||
Friction sensitivity | அதிகம் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அதிக வெடிப்பு | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | ஐதரசோயிக் அமிலம் குளோரின் அசைடு புரோமின் அசைடு அயோடின் அசைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
புளோரின் அசைடு (Fluorine azide) என்பது FN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1] டிரையசாடையீனைல் புளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நைட்ரசனும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ClN3, BrN3, மற்றும் IN3 போன்ற சேர்மங்களின் பண்புகளை புளோரின் அசைடும் வெளிப்படுத்துகிறது.[2] புளோரின் அணுவிற்கும் நைட்ரசனுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் இந்த சேர்மம் மிகவும் நிலையற்றதாகவும் வெடிப்புக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது.[3] கணக்கீடுகள் F-N-N கோணமானது 3 நைட்ரசன் அணுக்களின் நேர்கோட்டுடன் 102° ஆக இருப்பதைக் காட்டுகிறது.[4]
புளோரின் அசைடு –30° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கத் தொடங்கும். –139° செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்கும்.[5]
முதன் முதலில் ஜான் எஃப். ஆலர் என்பவரால் புளோரின் அசைடு உருவாக்கப்பட்டது.[6]
புளோரின் வாயுவுடன் ஐதரசோயிக் அமிலம் அல்லது சோடியம் அசைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் புளோரின் அசைடை உருவாக்கலாம்.[5][7]
புளோரின் அசைடு சாதாரண வெப்பநிலையில் வெடிக்காமல் சிதைந்து இருநைட்ரசன் இருபுளோரைடை உருவாக்குகிறது.
1000 பாகை செல்சியசு போன்ற அதிக வெப்பநிலையில் புளோரின் அசைடு, நைட்ரசன் மோனோபுளோரைடு இயங்குறுப்பாக உடைகிறது.:[7]
FN தானே குளிர்ச்சியடைந்து இருபடி சேர்மமாகிறது.
திண்ம அல்லது நீர்ம FN3 வெடித்து, அதிக அளவு ஆற்றலை வெளியிடும். ஒரு மெல்லிய படலம் 1.6 கிமீ/வி வேகத்தில் எரிகிறது. [8]வெடிப்பு அபாயம் காரணமாக, இந்த பொருளின் மிகக் குறைந்த அளவு மட்டுமே ஒரு நேரத்தில் கையாளப்பட வேண்டும்.[9]
போரான் முப்புளோரைடு (BF3) மற்றும் ஆர்சனிக் பெண்டாபுளோரைடு (AsF5) போன்ற இலூயிசு அமிலங்களுடன் -196 °செல்சியசு வெப்பநிலையில் FN3 கூட்டுசேர் பொருள்கள் உருவாகின்றன. இந்த மூலக்கூறுகள் Nα அணுவுடன் பிணைக்கப்படுகின்றன.[10]
அளவுருக்கள் | மதிப்பு[9] | அலகு |
A | 48131.448 | மெகா எர்ட்சு |
B | 5713.266 | மெகா எர்ட்சு |
C | 5095.276 | மெகா எர்ட்சு |
μa | 1.1 | |
μb | 0.7 |
அணுக்களுக்கு இடையிலான தூரம் F-N 0.1444 நானோமீட்டர், FN=NN 0.1253 நானோமீட்டர் மற்றும் FNN=N 0.1132 நானோமீட்டர் ஆகும்.[9]
புளோரின் அசைடு சேர்மத்தின் அடர்த்தி 1.3 கி/செ.மீ.[11] பொட்டாசியம் புளோரைடின் திண்மப் பரப்புகளில் புளோரின் அசைடு உறிஞ்சுகிறது, ஆனால் இலித்தியம் புளோரைடு அல்லது சோடியம் புளோரைடு பரப்புகளின் மீது உறிஞ்சப்படுவதில்லை. திண்ம உந்துசக்திகளின் ஆற்றலை அதிகரிக்க புளோரின் அசைடின் இந்த பண்பு ஆய்வு செய்யப்படுகிறது.[11]
புற ஊதா ஒளிமின்னழுத்த நிறமாலை அயனியாக்கம் உச்சநிலையை 11.01, 13,72, 15.6, 15.9, 16.67, 18.2 மற்றும் 19.7 எலக்ட்ரான் வோல்ட்டு எனக் காட்டுகிறது. முறையே இவை π, nN அல்லது nF, nF, πF, nN அல்லது σ, π மற்றும் σ. என சுற்றுப்பாதைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன:[3]