ஆள்கூறுகள்12°35′0″N 75°40′0″E / 12.58333°N 75.66667°Eநிறுவப்பட்டது1987[சான்று தேவை]நிருவாக அமைப்புகர்னாடகா வனத்துறை
புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் உள்ள கர்னாடகா மாநிலத்தில் உள்ள 21 வனவிலங்கு சரணாலயத்தில் ஒன்றாகும்.
இச்சரணாலயம் குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாலுகாவில் உள்ளது. மிக அரிதான அருகிவரும் பறவைகளின் இருப்பிடமாகும். காடாமக்கள் காப்புக்காடு இச்சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். புஷ்பகிரி(குமர பர்வதம்) இதில் உள்ள மிக உயர்ந்த சிகரமாகும். இச்சரணாலயம், வடக்கில் பிசில் காப்புக் காடு மற்றும் குக்கி சுப்பிரமணிய காட்டை ஒட்டி அமைந்துள்ளது.
மன்டல்பட்டி சிகரம், கோட் பேட்டா மற்றும் மக்காளகுடி பேட்டா ஆகியவை இச்சரணாலயத்தில் உள்ளன. இச்சரணாலயத்தில் மலாலி அருவி மற்றும் கோட் அபி அருவி(முக்கொட்லு அருவி) உள்ளன. புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம் உலக பாரம்பரிய இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]