புஷ்பதந்தர் | |
---|---|
![]() சிகார்ஜியில் உள்ள புஷ்பதந்தரின் சிற்பம் | |
அதிபதி | 9வது தீர்த்தங்கரர் |
வேறு பெயர்கள் | சுவிதிநாதர் |
சமண சமயத்தின் 9வது தீர்த்தங்கரான புஷ்பதந்தர் (Puṣpadanta), சுவிதிநாதர் [1] என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். சமண சமயச் சாத்திரங்களின் படி, புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகதர் நிலைக்கு உயர்ந்தவர்.
புஷ்பதந்தர், சுக்ரீவன் - சுப்பிரியா இணையருக்கு, தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தவர்.
புஷ்பதந்தர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தவர்.[2]
வெண்நிறம் கொண்ட புஷ்பதந்தரின் வாகனம் முதலை ஆகும். பூ பவழமல்லி, காவல் தேவதைகள் அஜிதன் எனும் யட்சனும்; மகாகாளி எனும் யட்சினி ஆவார்கள்.[3]