புஷ்பா 2: தி ரூல் | |
---|---|
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | சுகுமார் |
தயாரிப்பு |
|
கதை | சுகுமார் ஸ்ரீகாந்த் விஸ்ஸா (வசனங்கள்) |
இசை | பாடல்களும் பின்னணி இசையும்: தேவி ஸ்ரீ பிரசாத் கூடுதல் பின்னணி இசை: சாம் சி. எஸ். |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மிரோஸ்லாவ் குபா ப்ரோஜெக் |
படத்தொகுப்பு | நவீன் நூலி |
கலையகம் | |
வெளியீடு | 5 திசம்பர் 2024 |
ஓட்டம் | 200 நிமிடங்கள்[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹500 கோடி[3][4] |
மொத்த வருவாய் | ₹575 கோடி[5] |
புஷ்பா 2: தி ரூல் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழி அதிரடி திரைப்படம் [6] ஆகும். இத்திரைப்படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அல்லு அர்ஜுன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.
இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிரோஸ்லாவ் குபா புரோஜெக் ஒளிப்பதிவையும் நவீன் நூலி படத்தொகுப்பையும் பொறுப்பேற்றுச் செய்துள்ளனர். ₹ 400–500 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பா - 2 [3] [7] அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றாகும்.
புஷ்பா 2, 2024 திசம்பர் 5 அன்று வெளியாகி, முதல் மூன்று நாட்களில் ₹ 575 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளது. இது பல திரைத்துறைச் சாதனைகளைத் தகர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.[5]