தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 15 மார்ச்சு 1997 இலம்பூர் ஊரகம், தில்லி | ||||||||||||||||||||||||
வசிப்பிடம் | தில்லி | ||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 3 அங்குலம் | ||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||
விளையாட்டு | கட்டற்ற வகை மல்யுத்தம் | ||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 50 கி.கி/53 கிலோ கிராம் | ||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பூஜா கெலாட்டு (Pooja Gehlot) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார். 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி புதுதில்லியில் இவர் பிறந்தார். 50கிலோ மற்றும் 53 கிலோ எடை பிரிவுகளில் கட்டற்ற முறை மல்யுத்தப் போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். பல்கேரியாவின் புடாபெசுட்டு நகரில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[1][2] தோள்பட்டை காயம் காரணமாக இரண்டு ஆண்டுகள் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3]
பூஜா கெலாட்டு ஒரு கைப்பந்து வீரராக இருந்தார். உயரம் காரணமாக வேறு விளையாட்டுக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார். மாமா ஒரு மல்யுத்த வீரர் என்பதால் மல்யுத்தப் போட்டிக்காக இவரை ஊக்குவித்தார். 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் அணி பெற்ற வெற்றியால் ஈர்க்கப்பட்டதால் பூஜாவும் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்.