பூட்டானின் அரசமைப்புச் சட்டம் (திஃசொங்கா மொழி: འབྲུག་གི་རྩ་ཁྲིམས་ཆེན་མོ་; Wylie: 'Druk-gi cha-thrims-chen-mo) என்னும் சட்டத்தை பூட்டான் அரசாட்சி 2008ஆம் ஆண்டின் ஜூலை பதினெட்டாம் நாளில் ஏற்படுத்தியது. இதை அரசு அதிகாரிகள் கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் உருவாக்கினார். அரசமைப்புச் சட்டத்தில் மக்களாட்சியை போன்றதொரு ஆட்சியை அமைப்பதற்கான சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த அரசமைப்புச் சட்டம், பவுத்த மதக் கோட்பாடுகள், மனித உரிமைகள், பிற நாட்டு அரசமைப்புச் சட்டங்கள், மக்களின் கருத்துகள், முந்தைய சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.[1] பூட்டானின் அரசமைப்புச் சட்டம், தென்னாப்பிரிக்க அரசமைப்புச் சட்டத்தை பெரிதும் பின்பற்றி இருப்பதாகவும், அதற்கு காரணம் தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் என்றும் இளவரசியான சோனம் தேச்சென் வாங்சுக் கூறியுள்ளார்.[2]
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கூறுகள் கீழே தரப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டம் பூட்டானை மக்களாட்சி, அரசியல்சட்ட முடியாட்சி என்று குறிப்பிடுகிறது. பூட்டான் 20 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் நகரங்களையும், வட்டங்களையும் கொண்டிருக்கும். திஃசொங்கா மொழி பூட்டானின் தேசிய மொழியாகும்.[3] திசம்பர் பதினேழாம் நால் தேசிய நாளாகும்.[4]
நாட்டின் உயரிய சட்டமாக அரசமைப்புச் சட்டமாக இருக்கும். இதை மற்றவோ, திருத்தியமைக்கவோ பாராளுமன்றத்துகே அதிகாரம் உண்டு. அரசமைப்புச் சட்டத்துக்கு பின்னரோ, முன்னரோ நடைமுறைக்கு வரும் சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவோ, முரணாகவோ இருப்பின் அந்த சட்டம் செல்லாததாகி விடும்.[4]
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது.[4] நாட்டுக்கு உட்பட்ட இயற்கை வளங்கள் அரசுக்கு சொந்தமானவை ஆகும்.[4]
அரசர் உட்பட அரசு அதிகாரிகள் அனைவரும் 65 வயது நிறைந்ததும் பணி ஓய்வு கட்டாயமாகும்.[5][6][7][8] [9][10][11]
பூட்டான் அரசரே நாட்டுத் தலைவர் ஆவார்.[11] பூட்டானில் அனைத்து சமயங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை உடையவர் அரசர்.[12] இவரே பூட்டானின் முப்படைகளுக்கும் தலைவர்.[13]
அரசர் தன் செயல்பாடுகளை யாரிடமும் நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இருந்தபோதும், மக்களின் நலன்கருதி, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்து, அதன்வழி நடக்க வேண்டும்.[11]
அரசருக்கு 65 வயது வந்தவுடன், அவரது பதவி முடிவுக்கு வரும். அவரது வாரிசுகள் மட்டுமே அடுத்த அரசராக பதவியேற்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் அவர் பெற்றெடுத்திருந்தால் மூத்தவர் அரசராக பொறுப்பேற்பார். இளவரசரோ, இளவரசியோ 21 வயதை அடைந்ததும் பதவிக்கு வருவர்.[11] அரசருக்கு குழந்தைகள் இல்லாதபட்சத்தில் அவருடைய உடன்பிறப்புகளின் மூத்த பிள்ளை, அரசர் பதவிக்கு தகுதியானவர் ஆவார். அரச குடும்பத்து வாரிசுக்கு உடல்நலக் குறைபாடோ, மனநலக் குறைபாடோ இருப்பின் பதவிக்கான தகுதியை இழப்பார். பூட்டானுக்கு வெளியில் இருந்து ஒருவரை மணந்துகொண்டாலும், பதவிக்கான தகுதியை இழக்க நேரிடும்.[11]
கட்டுரை 2 பாகம் 19: அரசின் உயர் அதிகாரிகளை அரசர் நியமிப்பார். இவர்களில் நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், கணக்காளர் ஆகியோரும் அடங்குவர்.[10][11]
எதிர்க்கட்சித் தலைவர், தேசிய சட்ட மேலவையின் தலைவர், உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆகியோரையும் பிரதமரின் ஆலோசனையின் படி நியமிப்பார் அரசர்.[14]
பூட்டானின் பண்பாட்டு அடையாளம் பௌத்தம் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.[12] பவுத்த மதம் அமைதியையும், பொறுமையையும் போதிக்கிறது.[12]
நாட்டின் பண்பாட்டுக் கூறுகளை பாதுகாப்பதும், போற்றி வளர்ப்பதும் அரசின் கடமையாகும். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற புராதான இடங்கள், மத அடையாளங்களான சிலைகள், கோயில்கள், திஃசொங்கா மொழி, பூட்டானிய இலக்கியம், பூட்டானிய இசை, கலை ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.[15]
பண்பாட்டுக் கூறுகளை போற்றுவதற்கான சட்டத்தை பாராளுமன்றம் வரையறுக்கலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.[15]
இயற்கை வளங்களை பாதுகாப்பதும், சீர்கேடுகளை தடுப்பதும் நாட்டு மக்களின் கடமை என்று அரசமைப்புச் சட்டத்தின் 5வது கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.[4][16]
இயற்கை வளத்தை பாதுகாக்க நாட்டின் எந்தவொரு பகுதியையும், உயிரிக் காப்பகமாகவோ, தேசியப் பூங்காவாகவோ, பிற பாதுகாக்கப்பட்ட இடங்களாகவோ அறிவிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம்.[16]
{{cite web}}
: CS1 maint: year (link)