![]() சிவப்பு மிளகாயில் தாயரித்த பூண்டு சட்னி, தென்னிந்தியா | |
வகை | Condiment |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியத் துணைக்கண்டம் |
பகுதி | இந்தியத் துணைக்கண்டம், திபெத்து |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்திய உணவுமுறை, Bangladeshi cuisine, Pakistani cuisine, நேபாளிய உணவுகள் |
முக்கிய சேர்பொருட்கள் | பூண்டு, தேங்காய், நிலக்கடலை, மிளகாய் |
வேறுபாடுகள் | தயிர் சட்னி, பச்சடி (ராய்தா) |
பூண்டு சட்னி (Garlic chutney, lahsun chutney, lahsun ki chutney, lehsun chutney, bellulli chutney) என்பது சட்னி வகையும், சுவையூட்டியும் ஆகும். இவ்வுணவு இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியதாகும். காயாத அல்லது காய்ந்த வெள்ளைப்பூண்டுகளுடன், தேங்காய், நிலக்கடலைகள், பச்சை மிளகாய், காய்ந்த/சிவப்பு மிளகாய் சேர்த்தரைத்து, இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது.[1][2][3][4] சட்னி என்பது உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்காக தயாரிக்கப்படும் இணை பதார்த்தமாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் இது அடிக்கடி பயன்படும் சுவையூட்டி / துணை உணவு ஆகும்.
உலர் பூண்டு சட்னி பொட்டலங்களிலும், புட்டிகளிலும் கிடைக்கிறது.[5] வீட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை சட்னியை, நான்கு வாரங்கள் அறை வெப்பநிலையில் வைத்தும், ஆறு மாதங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியிலும் வைத்து பயன்படுத்தலாம்.[6] இச்சட்னியை தனியாகவும், இன் தயிர்,[3] தயிர், மோர், காய்கறி எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்தும் உண்ணலாம். சில நேரங்களில் பொடியாகவும், இது தயாரிக்கப்படுகிறது.