பூதம்களி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்படும் நாட்டுப்புறக் கலை வடிவம் ஆகும். இந்தக் கலை வடிவத்தின் உடையில் பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இது வழக்கமாக மலப்புரம் மாவட்டத்தின் பகவதி அம்மன் கோயில்களில் பதினைந்து நிமிடக் கலையாக பெரும்பாலும் இரவு நேரங்களில் நிகழ்த்தப்படுகிறது. இந்த நடனம் துர்கா தேவி தரிகா அசுரருடனான அவரது போர் பற்றிய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது .[1]
பெரும்பாலும் மூன்று நபர்களால் நடத்தப்படும் பூதம்களி பல்வேறு அடிச்சுவடுகளுடன் ஆடப்படுகிறது. நடனம் ஆடுவதற்கு ஒரு வாரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதமிருந்து இந்த நடனத்திற்கு தயார் ஆகின்றனா். இந்த நடனத்தை ஆடுவதற்கு கட்டுக்கோப்பான உடல் வாகு அவசியமாதலால் இச்செயல்முறை கடைபிடிக்கப்படுகிறது. சிலங்கி என்றழைக்கப்படும் ஒரு வகை மணிகள் கொண்ட சலங்கைகளை அணிந்த கலைஞர்கள், துடி என்ற இசைக் கருவியின் தாளத்திற்கு ஏற்ப நடனக் கலைஞா்கள் நடனமாடுகின்றனா். நடனம் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவும் பின்னர் நேரம் செல்லச் செல்ல தாளமும் நடன வேகமும் அதிகரிக்கிறது. இந்த நடனம் ஆடுவதற்கு நல்ல உடல் நெகிழ்வுத் தன்மை அவசியம் ஆகிறது . வழக்கமாக இந்த கலை வடிவத்தை கேரளாவில் உள்ள மன்னான்ஸ் என்ற சமூக மக்களால் நிகழ்த்தப்படுகிறது [2]
பூதம்களி நடனத்தின் போது பயன்படுத்தப்படும் உடைகள் மற்றும் ஆபரணங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளன. இந்த ஆடை கதகளி நடன உடையை ஒத்திருக்கிறது. நடனக் கலைஞா்கள் அணியும் சிக்கலான பூதம் போன்ற முகமூடிம் மற்றும் தலைக்கு மேல் அணியும் பெரிய பூத முகம் போன்ற அலங்காரப் பலகை பலா மரம் அல்லது முறுக்கு என்ற ஒரு வகை மரத்தால் செய்யப்படுகின்றன. அலங்காரத்திற்கு மயில் இறகுகள், துணி, பட்டு, கரும்புத் துண்டுகள், கண்ணாடி, பல்வேறு வண்ணங்களைக் கொண்ட காகிதங்கள் மற்றும் மூங்கில் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கலைஞர்கள் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிகளில் வெவ்வேறு வகையான ஆபரணங்களை அணிந்து கொண்டு மணிகட்டு மற்றும் தோள்களில் முட்களுடன் கூடிய சிறப்பு வளையல்களையும் அணிந்துள்ளனர். இந்த ஆபரணங்கள் சிவப்பு துணிக்கு மேலே அணியப்பட்டுள்ளன.
மயிலின் இறகுகள் முடிகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றன. நடனதடத்தை ஆடுபவா்கள் மரத்தால் ஆன வண்ண முகமூடியுடன் கிரீடம் அணிந்துள்ளனர். இந்த முகமூடியில் நாக்கு வெளிப்புறமாக நீட்டப்பட்டுள்ளது. இது சிவனின் வீரர்களின் கோபத்தையும் ஆத்திரத்தையும் குறிக்கிறது. பூதம்களி நடனத்தில் வண்ணமயமான கிரீடம் அரை வட்ட வடிவத்தில் உள்ளது. நடனக் கலைஞர்கள் தங்கள் கையில் ஒரு கேடயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[3]
முன்னர் பூதம்களி நடனத்தை ஆட பிரத்யேக நடனக்கலைஞா்கள் இருந்த நிலை மாறி இன்றைய காலகட்டத்தில் அதை ஆடும் கலைஞா்களின் எண்ணிக்ககை குறைந்து வருகிறது. அவா்களுக்கு சொற்ப அளவிலேயே வருமானம் கிடைப்பதால் வேறு தொழில்களை செய்ய செல்கின்றனா். இதனால் இக்கலை வடிவம் கேரளாவில் மெல்ல மெல்லக் குறைந்து வருவதாக இந்தியா டூடே ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.[4]
கூத்தநாடு வி. பாலன் பூதம்களி நடனத்தை ஆடும் முக்கிய நாட்டுக்புற நடனக் கலைஞர் ஆவார். அவருக்கு 2002 ஆம் ஆண்டுக்காக கேரள சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)