பூபல்கர் போர்

பூபல்கர் போர்
Battle of Bhupalgarh
நாள் ஏப்ரல் 2, 1679
இடம் பூபல்கர்
முகலாயர் வெற்றி[1]
பிரிவினர்
மராட்டியப் பேரரசு முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
சிவாஜி (பேரரசர்) திலிர் கான்

பூபல்கர் போர் (Battle of Bhupalgarh) 1679 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசிற்கும் மராட்டிய பேரரசிற்கும் இடையில் நிகழ்ந்தது. கடுமையான இரத்தக்களரி எதிர்ப்புடன் 55 நாட்களுக்கு மேலாக முற்றுகை நீடித்தது. போரின் விளைவாக பூபல்கர் கோட்டை இடிந்தது. படைத்தலைவர் திலீர் கானின் தலைமையில் முகலாயர்களுக்கு ஒரு தீர்க்கமான வெற்றியும் கிடைத்தது.[1]

பயங்கர சண்டைக்குப் பிறகு, முகலாயர்கள் கோட்டையையும் அதன் பாசறைகளையும் கைப்பற்றி காரிசனை அடிமைப்படுத்தினர். திலீர் கான் பின்னர் அருகிலுள்ள மராட்டியர்களுக்கு வலிமை சேர்த்தவர்களையும் தோற்கடித்து கோட்டையை தரைமட்டமாக்கினார். [2]

முடிவு

[தொகு]

மராட்டிய மன்னர் சிவாஜி இந்த போரில் முகலாயர்களால் தோற்கடிக்கப்பட்டார். பூபல்கர் கோட்டையும் முகலாயர்களால் இடிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jacques, Tony (2006). Dictionary of Battles and Sieges. Greenwood Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33536-5. Archived from the original on 26 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2015. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  2. "Battle of Bhupalgarh".
  3. "Battles involving the Mughal Empire".