பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில், பூப்பரா கோயில், பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின்சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது.[2][3][4]சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது.[5]தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[1][6] இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
1920-இல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குப்தர் காலத்து இக்கோயிலின் காலம், கிபி 5-6-ஆம் நூற்றாண்டு காலத்தவை என தொல்லியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.[9][10][5][11]
பூமரா சிவன் கோயிலின் கருவறை, ஆண்டு 1919பூமரா சிவன் கோயில் கருவறை ஜன்னலின் புகைப்படம், ஆண்டு, 1919
↑Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8264-9865-6., Quote: "Other examples are the fifth-century Siva temple at Bhumara which has a fine ekamukha (single faced) linga, a sixth century Dasavatara temple at Deogarh (...)".
Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0300062176
Banerji, R. D. (1998), The Temple of Siva at Bhumara, Memoirs of the Archaeological Survey of India No 16 (Orig year 1924), இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
Michael W. Meister u. a. (Eds.): Encyclopaedia of Indian Temple Architecture. North India - Foundations of North Indian Style Princeton University Press, Princeton, 1988, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-691-04053-2, p 40ff.