பூம்புகார் | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | ப. நீலகண்டன் |
தயாரிப்பு | மேகலா பிக்சர்ஸ் |
கதை | இளங்கோ அடிகள் |
திரைக்கதை | மு. கருணாநிதி |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, கே. பி. சுந்தராம்பாள் |
விநியோகம் | எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் |
வெளியீடு | 1964 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பூம்புகார் 1964 இல் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடல் எழுதி ப. நீலகண்டன் இயக்கிய ஒரு தமிழ் காவிய படம். 1942 ஆம் ஆண்டு வெளியான கண்ணகி படத்திற்குப் பின் வந்த சிலப்பதிகாரம் காவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் இது. இத்திரைப்படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ். எஸ். இராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தி அடிகளாக கே. பி. சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர்.
பூம்புகார் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை உடுமலை நாராயண கவி, மாயவநாதன், ஆலங்குடி சோமு, மு. கருணாநிதி, இராதாமாணிக்கம் ஆகியோர் இயற்றினர்.[4]
வரிசை எண் |
பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | அளவு (m:ss) |
---|---|---|---|---|
1 | என்னை முதன்முதலாக | டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி | இராதாமாணிக்கம் | 3:37 |
2 | பொன்னாள் இதுபோலே | எஸ். ஜானகி | உடுமலை நாராயண கவி | 3:28 |
3 | வாழ்க்கை எனும் ஓடம் | கே. பி. சுந்தராம்பாள் | மு. கருணாநிதி | 3:19 |
4 | தப்பித்து வந்தானம்மா | கே. பி. சுந்தராம்பாள் | மாயவநாதன் | 2:36 |
5 | அன்று கொல்லும் | கே. பி. சுந்தராம்பாள் | மாயவநாதன் | 2:16 |
6 | இறைவா இறைவா | பி. சுசீலா | ஆலங்குடி சோமு | 3:55 |
7 | காவிரி பெண்ணே | பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் | மாயவநாதன் | 3:29 |
8 | பொட்டிருந்தும் | பி. சுசீலா | ஆலங்குடி சோமு | 3:13 |
9 | தமிழ் எங்கள் உயிரானது | பி. சுசீலா | மாயவநாதன் | 4:30 |
10 | துன்பமெல்லாம் | கே. பி. சுந்தராம்பாள் | மாயவநாதன் | 3:22 |
11 | தொட்டவுடன் மலரொன்று | கே. பி. சுந்தராம்பாள் | மாயவநாதன் | 0:38 |
அன்று கொல்லும் அரசின் ஆணை.. என்ற பாடலில் "நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது" எனக் கவிஞர் மாயவநாதன் எழுதியிருந்தார். கே. பி. சுந்தராம்பாள் அந்த வரியைப் பாட மறுத்துவிட்டார். மாயவநாதனோ ஊருக்குப் போய்விட்டார். எனவே கருணாநிதியே அந்த வரியை "நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" என மாற்றி எழுதிக் கொடுத்தார்.[4]