பூரியா தாரிணி Pouria Darini | |
---|---|
![]() | |
நாடு | ஈரான் |
பிறப்பு | 24 சனவரி 1991 சீரபுத்து, கெர்மான் மாகாணம், ஈரான் |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2013) |
பிடே தரவுகோள் | 2428 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2548 (சூன் 2013) |
பூரியா தாரிணி (Pouria Darini) ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1991 ஆம் ஆண்டு சனவரி மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2013 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு பூரியாவுக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கியது.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் ஈரான் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். அங்கு இவர் உருசிய நாட்டு சதுரங்க வீரர் திமிட்ரி ஆண்ட்ரேகினிடம் முதல் சுற்றில் தோற்றுப் போனார்.
தாரினி 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈரானிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சதுரங்க வெற்றியாளர் கோப்பையை வென்றார் [1]
2010 ஆம் ஆண்டில் அமேதான் நகரத்தில் நடந்த 9 ஆவது எப்னே சினா திறந்த நிலை சதுரங்கப் போட்டியை வென்றார் [2]
2015 ஆம் ஆண்டில் 4 ஆவது சர்தாரன் திறந்தநிலை போட்டியை வென்றார் [3]
2016 ஆம் ஆண்டில் 18 ஆவது துபாய் நாட்டில் நடைபெற்ற திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் மிகைல் ஆலுடன் தாரினி 3 முதல் 8 ஆவது வரையிலான இடங்களைப் பிடித்தார். ஆன்டிபோவ், லாசரோ புரூசன் பாடிசுடா, விதித் சந்தோசு குசராத்தி, அலெக்சாண்டர் ஃபியர் மற்றும் போரிசு சாவ்செங்கோ [4] ஆகியோர் இப்பட்டியலின் இதர வீரர்களாவர்.
2020 ஆம் ஆண்டு ஈரானிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பூரியா தாரிணி 4 அவது இடத்தைப் பெற்றார்.[5][6] 2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக்கோப்பை போட்டியிலும் இவர் விளையாடினார். முதல் சுற்றில் அங்கேரி நாட்டைச் சேர்ந்த பெரெங்கு பெர்க்சுடன் மோதினார்.